மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு தேசியக் கருத்தரங்கு

N.S.Rajendranமலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டவரைவு குழு தயாரித்துள்ள தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடப்பட்ட முன்வரைவு தமிழ்ப்பள்ளிகள் மீது கடப்பாடு கொண்டுள்ளோரின் பங்களிப்புகளைப் பெறுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட ஒரு தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

பத்து ஆண்டு காலத்திற்கான இந்த விரிவான செயல் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் என்.எஸ். ராஜேந்திரன் கூறினார்.

“இக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பங்களிப்பை சேகரித்த பின்னர், இந்த மேம்பாட்டு திட்டத்தின் இறுதி அறிக்கையை நாங்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் அளிப்போம்”, என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவுக்கு அளித்த ஒரு தனிப்பட்ட நேர்காணலில் கூறினார்.

எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த மேம்பாட்டு திட்ட குழு பிரதமர்துறை இலாகாவின் கீழ் மே 2012 -இல் நியமிக்கப்பட்டது. தேசிய அளவில் 523 தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட இந்தத் திட்டத்தைப் பிரதமரே முன்மொழிந்தார் என்று ராஜேந்திரன் மேலும் கூறினார்.

இக்குழு நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தி அவர்களிடமிருந்து தகவல்களை சேகரித்ததாக ராஜேந்திரன் கூறினார்.

“முன்னுரிமை பெற்றுள்ள சிக்கல்களில்,  குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளை இடமாற்றம் செய்தல், கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள், கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றின் தரம், மாணவர்களின் சாதனை , கூட்டு பாடதிட்ட நடவடிக்கைகளின் தரம், அறக்காப்பு நிதியம் ( நிதி) மற்றும் பெற்றோர்-சமூக பங்கேற்பு ஆகியவை அடங்கும் என்றாரவர்.