அப்துல் தாயிப் மஹ்முட்டுக்குப் பிறகு அடினான் சதேம் சரவாக்கின் புதிய முதலமைச்சராக பொறுபேற்பார்.
இன்று, சரவாக் ஆளுநர் ஆபாங் முகம்மட் சலாஹுடினிடம் தம் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்த தாயிப் இதனை அறிவித்தார்.
தாயிப்பின் பதவி விலகல் பிப்ரவரி 28-இல் நடப்புக்கு வரும். அன்றுதான் சரவாக் ஆளுநரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
அடினானுக்கு சரவாக் பிஎன்னின் முழு ஆதரவு இருப்பதாக தாயிப் கூறினார்.
அடினான்,70, இப்போது பார்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து(பிபிபி)-வின் தகவல் பிரிவுத் தலைவர். அத்துடன், அமைச்சர் தகுதியுடன் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராகவும் இருக்கிறார்.
அடினான் முதலமைச்சராவதில் புத்ரா ஜெயாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை என்று அரசல் புரசலாக செய்தி அடிபடுகிறது. துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூச்சிங்குக்கு வருகை புரிவது அந்த வதந்திக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டை.
குடும்ப அரசியல் என்பதற்கு சரவாக் அரசியல் ஒரு முன் உதாரணம் !
1) அப்துல் ரஹ்மான் யாகோப் ( அப்துல் தயிப்பின் சித்தப்பா ) 1970 – 1981 வரை . 2) அப்துல் தயிப் 1981 -2014 வரை . இப்போது அப்துல் தயிபின் மைத்துனர் அட்னான் சாதிம் ஆட்சியில் அமருகிறார் . கடந்த 44 ஆண்டுகள் ஒரு மாநிலம் ஒரு கும்ப சொத்தாகிவிட்டது. இதில் என்ன அதிசயம் என்றால் , சிறுபான்மை melanau சமூகத்தினர் ( 10 % ) 44 ஆண்டுகள் ஆட்சி செய்வதுதான் ! தயிப் ஆளுநர் பதவி ஏற்றால் 1/2 நூற்றாண்டு சரவாக் மாநிலம் ஒரு குடும்பத்தால் ஆளப்படும் மாநிலம் என்ற பெருமைகுல்லாகும் !! ஷபாஸ் BN !!