பிஎஸ்எம்: காஜாங் இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை

1anwar psmமலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்) காஜாங் இடைத் தேர்தலில் போட்டி இடாது. அதே வேளை, அக்கட்சி பக்கத்தான் ராக்யாட்டிற்கு ஆதரவு அளிக்காது ஏனென்றால் இடைத் தேர்தலுக்கான காரணத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்த இடைத் தேர்தல் வீணானது என்பதுடன் நியாயமற்றது என்று பிஎஸ்எம் கூறிற்று.

காஜாங் இடைத் தேர்தல் “நன்னெறிக்கு முரணானது” என்று பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் இன்று காலையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிஎஸ்எம் இந்த இடைத் தேர்தலில் பங்கேற்காது என்பதோடு அது ஆதரிக்காத ஓர் இடைத் தேர்தல் பரப்புரையிலும் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் நாசிர் ஹசிம் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “இந்த இடைத் தேர்தல் ஜனநாயக நடைமுறைக்கு நல்லதோர் முன்னுதாரணம் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று காஜாங் வாக்காளர்களுக்கு பிஎஸ் எம் ஆலோசனை கூறாது. “வாக்கு அளிப்பதோ இல்லையோ அது வாக்காளர்களின் முழுமையான உரிமையாகும் என்றாரவர்.

ஆனால், கட்சி இந்த இடைத் தேர்தலை பயன்படுத்தி இதர முக்கியமான விவகாரங்கள் குறித்து பரப்புரை செய்யக்கூடும். அவற்றில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி), டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் (டிபிபிஎ), இலவசக் கல்வி மற்றும் குறைந்தபட்ச சம்பள கொள்கையை வலுப்படுத்தல் போன்றவை அப்பரப்புரையில் அடங்கும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

TAGS: