அம்னோவை மாநிலத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என சரவாக் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ள பதவி விலகிச் செல்லும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட்டைப்போல் சாபா தலைவர்களும் இருக்க வேண்டும் என்கிறார் சாபா மாநில சீரமைப்புக் கட்சித் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான்.
இனங்களைப் பிரித்துவைக்கும் அம்னோ-அரசியலால் பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட சரவாக் மக்களுக்குக் கேடுதான் விளையும் என்று அந்த மூத்த தலைவர் எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
“சாபா/சரவாக் விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் அளவுகோல்”, என்றாரவர்.
“இப்போதுள்ள அம்னோ பாரு, துங்கு அப்துல் ரஹ்மான் காலத்து பழைய அம்னோ போன்றதல்ல. கடந்த காலத் தலைவர்களிடமிருந்த நல்லொழுக்கம், நற்கொள்கைகள், பெருந்தன்மை போன்றவையெல்லாம் இப்போது இல்லை”, என ஜெப்ரி(வலம்) மேலும் சொன்னார்.
அப்துல் தாயிப் , அம்னோ சரவாக் மாநிலத்தில் கால்வைக்க கூடாது என்பதற்கு காரணமே வேறு !! பெருச்சாளிக்கு போட்டிவந்துவிடகூடாது , தான் ஒருவன் மட்டும் சுரண்ட வேண்டும் , அம்னோவை விட்டால் “பெரும் பெருச்சாளிகள் ” மூட்டை கட்டிவிடுவார்கள் என்பதற்காகத்தான், அதுதான் உண்மை !! சபா தலைவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது , அதற்க்கு இந்த ஜெப்பெரி உதாரணம் . இவர் அரசியலில் பண்ணாத கூத்தா ? உன்னையே நீ ஒருமுறை திரும்பிப்பார்!
பிறகு ஏன் அம்னோவுடன் கூட்டு சேர்ந்தீர்கள்… கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா…
எல்லாம் திருடன் ஆனால் இனத்தை விட்டு கொடுக்க மாட்டார் பலர்,சிலரைப்போல அல்ல.