அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்கிறதே தவிர, “இனவாதப் பேச்சுகளை”க் கண்டுகொள்வதில்லை, “வன்முறை பற்றிய மிரட்டல்களை”த் தடுப்பதில்லை என பிகேஆர் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் குறைகூறியுள்ளார்.
இம்முரண்பாடுகள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “உருமாற்ற:”த் திட்டம் என்பது “வெறும் வெற்று வேட்டு” என்பதைக் காண்பிக்கின்றது என்று சிலாங்கூர் சட்டமன்ற துணைத் தலைவரான நிக் நஸ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.
வார இதழான The Heat-டும் இன்னும் வெளியீடு காணப்படாத FZ Daily-யும் தடைசெய்யப்பட்டதிலிருந்து நஜிப் நிர்வாகம் சொந்த நிழலைக் கண்டே அஞ்சுவதை உணர முடிகிறது என்றாரவர்.
“செய்திதாள்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நஜிப் அரசாங்கம் மற்றவர்களைக் கண்டு அஞ்சுவதற்கும் அதனால் விமர்சங்களைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை என்பதற்கும் நல்ல எடுத்துக்காட்டு.
“ஆனால், இதே நிர்வாகம், குறிப்பிட்ட சில என்ஜிஓ-கள் இனவாதப் பேச்சு பேசுவதையும் மிரட்டல் விடுப்பதையும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் மிகவும் வேடிக்கையாக உள்ளது”, என்றாரவர்.
FZ.com. செய்தித் தளத்தின் பிரசுர உரிமம் இரத்துச் செய்யப்பட்டது பற்றிக் கருத்துரைத்த நிக் நஸ்மி இவ்வாறு கூறினார்.
வார இதழான த ஹீட்-டுக்கும் தடைவிதிக்கப்பட்டு சில வாரங்களுக்குப் பின்னர் தடை நீக்கப்பட்டது.
அம்னோ காலங்காலமாக இனவாத பேச்சுக்களை உரமிட்டு வளர்த்து,வளர்ந்துள்ளது!தொட்டால் சுடும் !
பி என் மற்றும் அம்னோவின் இரட்டை வேடம்
அரசியல் விபச்சாரிகள் எங்கேயும் எப்போதும் இந்நாட்டில் பெருத்து விட்டனர்
இந்நாட்டின் தலை எழுத்தை இந்த விபச்சாரிகளும் ஊழல்வாதிகளும் தலை கீழாக மாற்றி விட்டனர்