வெப்பநிலை தொடர்ந்தால் கிள்ளான் பள்ளத்தாக்கில் குடிநீர் நெருக்கடி ஏற்படலாம்

waterஇப்பொதுள்ள  வெப்பநிலை  மேலும்  மூன்று  வாரங்களுக்குத்  தொடருமானால்  கிள்ளான்  பள்ளத்தாக்கிலும்  புத்ரா  ஜெயாவில்  வசிக்கும்  இரண்டு  மில்லியன்  பேர்  குடிநீர்  பற்றாக்குறையால்  பாதிக்கப்படுவர்.

சுங்கை  சிலாங்கூரிலும்  கிளாங்  கேட்சிலும்  நீரின்  அளவு  60 விழுக்காட்டுக்கும்  குறைவாக  உள்ளது  என்றும்  வெப்பநிலை  தொடர்ந்தால்  அது  மேலும்  குறையலாம்  என்றும்  எரிபொருள், பசுமைத்  தொழில்நுட்ப  துணை  அமைச்சர்  மகாட்சிர்  காலிட்  கூறினார்.

“இப்போது  சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டில்  உள்ள  நீரின்  அளவு  57.63  விழுக்காடு.  கிளாங்  கேட்சில்   58 விழுக்காடு. 16 நாள்களுக்கு  மழை  பெய்யாவிட்டால்  நீரின்  அளவு  45  விழுக்காடாகக்  குறையும்.

“வறட்சி  நிலை  தொடருமானால்  தண்ணீரைப்  பங்கீடு  செய்ய  வேண்டிய  நிலை  வரலாம்”, என்றவர்  சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டுக்கு  வருகை  புரிந்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.