எங்கே இருக்கிறது ஊடகச் சுதந்திரம்? சுரேந்திரன் சாடல்

pkr_n_surendran_01ஊடகங்கள்  “முன் எப்போதையும்விட  சுதந்திரமாக  உள்ளன” என்பது  இணையத்தளங்களுக்கு  மட்டுமே  பொருந்தும்.

மற்றபடி  வானொலி, தொலைக்காட்சி,  பத்திரிகைகள்  ஆகியவற்றை  அரசாங்கம்  இறுக்கமாக  தனது  பிடிக்குள்  வைத்திருக்கும்போது  அவ்வாறு  அறிக்கை  விடுப்பது  “அபத்தமாகும்”  என  பிகேஆர்  எம்பி  என்.சுரேந்திரன்
கூறினார்.

செய்திதாள்களின்  உரிமங்கள்  எந்த  நேரத்திலும்  மீட்டுக்கொள்ளப்படும்  அபாயம்  இருக்கவே  செய்கிறது.  தொலைக்காட்சி,  வானொலி  ஆகியவற்றில்  மாற்றரசுக்  கட்சியினருக்கும்  பொதுமக்களுக்கும் இடமளிக்கப்படுவதில்லை.

“அது  நம்ப முடியாத  ஒன்று. நினைத்தால்  சிரிப்பு  வருகிறது. பிரதமர்துறை  அலுவலகம்  கூறியிருப்பது  முழுப்  பொய்”,  என்று  சுரேந்திரன்  குறிப்பிட்டார்.

மலேசியாவில்  ஊடகங்கள்,  நஜிப் அப்துல்  ரசாக்  நிர்வாகத்தில்தான்  “முன் எப்போதையும்விட  சுதந்திரமாக  செயல்படுகின்றன”  எனப்  பிரதமர்துறை  அலுவலகம்  வெளியிட்டிருக்கும்  அறிக்கைக்கு  எதிர்வினையாக  சுரேந்திரன்  இவ்வாறு  கூறினார்.