சரவாக்கின் புதிய சிஎம் சுயமாக செயல்படுவாரா?

cmசரவாக்கில், அப்துல்  தாயிப்  மஹ்முட்டிடமிருந்து  மார்ச்  மாதம் முதலமைச்சர் பதவியை  ஏற்கும் அடினான்  சாதேம்  முதலமைச்சரான  பின்னர்  சுயமாக  செயல்படுவாரா  என்ற  கேள்வி  எழுந்திருக்கிறது.

ஏனென்றால் அவர்  பதவியேற்ற  சில   நாள்களிலேயே  தாயிப் சரவாக்  ஆளுநராக  நியமிக்கப்படுவார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

தாயிப்பின்  முன்னாள்  மனைவி  அடினானின்  சகோதரி.  அந்த  வகையில்  இருவரும்  நெருங்கிய  உறவினர்கள்.  அத்துடன்  அரசியலிலும்  இருவருக்குமிடையில்  நெருக்கம்  அதிகம். அடினான்  தாயிப்பின்  அலோசகராகவும்  தீவிர  விசுவாசியாகவும் இருந்து  வந்திருப்பவர்.

33 ஆண்டுகள்  முதலமைச்சராக  இருந்துவிட்டு  பணி ஒய்வுபெறும்  தாயிப்  ஆளுநர்  ஆனபின்னர்  சாதேமின்  பணியில்  குறுக்கிடாமல்  இருப்பாரா  என்பதால்தான்  இக்கேள்வி  எழுந்திருப்பதாக   யுனிவர்சிடி  மலேசியா சரவாக் (யுனிமாஸ்)   அரசியல்  ஆய்வாளர்   டாக்டர்  ஜெனிரி  அமிர்  கூறினார்.

“தாயிப்  ஆளுநராக  இருக்கும்வரை  அடினான்  சுயமாக  செயல்பட  இடமிருக்காது  என்றே  தோன்றுகிறது”,  என்றாரவர்.