லியோ: ஒப்ஸ் லாலாங் நடவடிக்கைக்கு அன்வார்தான் காரணம்

liow1987-இல்,  ஒப்ஸ் லாலாங்  நடவடிக்கையில்  பலர்  கைது  செய்யப்படுவதற்குக்  காரணமாக  இருந்தவர்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்தான்  என  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  காஜாங்  சீனர்  சமூகத்துக்கு  நினைவுபடுத்தினார். 

அன்வார்  மெண்டரின்  தெரியாத  ஆசிரியர்களைச்  சீனப்  பள்ளிகளுக்கு  அனுப்பி  வைத்தார்  என்றாரவர். 

1980-களில், கல்வி  அமைச்சராக   இருந்த  அன்வார்  சீனக்  கல்வியை  அழிக்கும்  நோக்கில்  அவ்வாறு  செய்தார்.    இதனால்  சீனர்களிடையே  அதிருப்தி  ஏற்பட்டு  அவர்கள்  கேள்வி  கேட்கத்  தொடங்கியதும்  அவர்கள்மீது   ஒப்ஸ்  லாலாங்  நடவடிக்கை  ஏவி  விடப்பட்டது. அதில்  108 அரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  தடுத்து  வைக்கப்பட்டனர்.

“அது  சீனக்  கல்வியாளர்  மனத்தில்  பசுமையாக  இருக்கிறது. அதிலிருந்து  நமக்குத்  தெரியவருவது  இதுதான்.  அன்வார்  பல  வாக்குறுதிகளைக்  கொடுப்பார்  ஆனால்,  அவற்றை  நிறைவேற்ற  மாட்டார்.

“இம்முறை  வாக்காளர்கள்  அவருக்கு  நல்ல  பாடம்  கற்றுத்தர  வேண்டும். அன்வார்  நம்பத்  தகாதவர்  என்பதை  நாம்  மறக்கக்கூடாது…..வாக்குகளைப்  பெறுவதற்காக  எதையும்  செய்வதாக  அவர்  உறுதி  கூறுவார்”.

காஜாங்,  சுங்கை  சுவா  மார்க்கெட்டில்  காதலர்  தினத்தை   ஒட்டி  அங்கிருந்தோருக்குப்  பூக்களை வழங்கிய  பின்னர்  லியோ  இவ்வாறு  கூறினார்.