காஜாங் இடைத் தேர்தலில் ஜைட் இப்ராகிம்?

zaidமுன்னாள்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  எதிர்வரும்  காஜாங்  இடைத்  தேர்தலில்  களமிறங்கும்  நோக்கம்  இருப்பதாக  இன்று  அறிவித்தார். 

அங்கு  போட்டியிடுவது  மக்களைச்  சந்திக்கவும்  நாடு  இப்போது  எதிர்நோக்கும்  பல்வேறு  அரசியல்,  பொருளாதார  விவகாரங்கள்  பற்றி  அவர்களுடன்  கலந்துரையாடவும் வாய்ப்பாக  அமையும்  என்றவர்  தம்  வலைப்பதிவில்  கூறி  இருந்தார்.

“மக்களை  நேருக்கு  நேர்  சந்தித்துப்  பேசலாம்,  அவர்கள்  சொல்வதைக்  கேட்கலாம்.  அவர்களோடு  சாத்தேயும்  சாப்பிடலாம். 

“காஜாங்  வாக்காளர்களுடன்  பேசுவதால்  அவர்கள்  என்  கருத்துக்களை  ஏற்றுக்கொள்கிறார்களா  என்பதையும்  தெரிந்துகொள்ள  முடியும்.  அவை  நம்  கொள்கை-வகுப்பாளர்களுக்குக்கூட  பயனளிக்கும்   பின்னூட்டங்களாக  அமையலாம்”,  என்றாரவர்.