பிப்.19-இல் குட்டி இந்தியா கலவரம்மீது பொது விசாரணை

riot 1சிங்கப்பூர்  குட்டி  இந்தியா  பகுதியில்  நிகழ்ந்த  கலவரம்  மீதான  பொது  விசாரணை  பிப்ரவரி  19-இல்  தொடங்கும்.

விசாரணைக்கான  ஆயத்த  வேலைகளை பொது  விசாரணைக் குழு(சிஓஐ)ச்   செயலகம் செய்து  வருகிறது. கலவரத்தை  ஆராய   நியமனம்  செய்யப்பட்ட  மத்திய  போதைப்பொருள்  பிரிவு  அதிகாரிகள்  கிட்ட   300  பேரைச் சந்தித்து வாக்குமூலம்  பதிவு  செய்திருக்கிறார்கள்.

அவர்களின்  வாக்குமூலங்களைப்  பரிசீலித்த  சிஓஐ  குறைந்தது  70  பேரையாவது  சாட்சியமளிக்க  அழைக்கும்  எனத்  தெரிகிறது.

பொது  விசாரணை  நான்கு  வாரங்களுக்கு   நிடிக்கலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

riot 2முதல் வார   விசாரணையில்  கலவரம்  தொடங்கிய  விதம்  மீதும்  அதை  அடக்க  பாதுகாப்புப்  படையினர்  மேற்கொண்ட  நடவடிக்கைகள்மீதும்  கவனம்  செலுத்தப்படும். 

2013, டிசம்பர் 8-இல்,  33-வயது  இந்திய  நாட்டவர்  ஒருவர்  விபத்தில்  சிக்கி  இறந்ததை  அடுத்து  சிங்கப்பூரின்  குட்டி  இந்தியாவில்  கலவரம்  வெடித்தது.