அன்வார்: மசீச அம்னோவின் அடிமைபோல் நடந்துகொள்ளக்கூடாது

anwar 1மசீச,  சீனர்  சமூகத்துக்காக  துணிச்சலாகக்  குரல்  கொடுக்க  வேண்டும்,  அம்னோவொன்  அடிமைபோல்  நடந்துகொள்ளக்கூடாது  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  வலியுறுத்தினார்.

மசீச  தலைவர்  லியோங்  தியோங்  லாய்  1987-இல்,  ஒப்ஸ்  லாலாங்  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதற்கு  அன்வார்தான்  காரணம்  என்று  கூறி இருப்பதற்குப்  பதிலடியாக  அன்வார்  இவ்வாறு  கூறினார்.

நேற்றிரவு,   காஜாங்கில்  சீனப்புத்தாண்டு  திறந்த  இல்ல  உபசரிப்பில்   கலந்துகொண்ட  அன்வார்,  லியோவுக்கும்  மசீச-வுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையோ முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டையோ  குறைசொல்லும்  துணிச்சல்  இல்லை  என்று  சாடினார்..

“அப்போது  பிரதமராகவும்  உள்துறை  அமைச்சராகவும்  இருந்தவர்  யார்? மகாதிர்.  அம்னோ  இளைஞர்  தலைவர்  யார்? நஜிப்.  அவர்களைக்  குற்றம்  சொல்வாரா(லியோ)?  மாட்டார்.  அதற்குத்  துணிச்சல்  இல்லை”,  என்று  அன்வார்  குறிப்பிட்டார். .