பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், ஊழலை எதிர்ப்பதில் வெற்றிபெற முடியாததால் பதவி விலகுவார் என்று கூறும் வதந்திகளை மறுக்கிறார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதால் பதவி விலகும் எண்ணமெல்லாம் கிடையாது என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை, பி. வேதமூர்த்தி பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பால் லவ்வும் அவ்வாறே செய்வார் என வதந்தி பரவியது.
வேதமூர்த்தியைப் போலவே, லவ்-வும் அரசியல் கட்சி எதையும் சாராதவர், செனட்டராக்கப்பட்டு பிறகு அமைச்சரானார்.
ஹிந்தியன் வேத்தவை பற்றி பேச யாருக்கும் அதிகாரம் இல்லை.ஆட்சி 2 என்றும் அதிகாரம் இதற்கு அலையோ அலயொன்னு அலையும் இக்காலத்தில் செனட்டர் பதவியை தூக்கி எறிந்த வேதாவை விமர்சிக்க தகுதி இல்லை யாருக்கும்.நாராயண நாராயண.
பிதமர்துறை அமைச்சர் திரு.பால் லவ் வாழத்தெரிந்த இனத்தில் பிறந்தவர். அவர்கள் இனம் உழைக்க பிறந்த இனம். மற்றவர்கள் மீது கவனம் செலுத்தாமல் வாழும் இனம். பாரிசான் அரசாங்கத்தில் வேலை செய்யும் எவரையும் வையாத இனம். முடிந்தால், நாடாளுமன்றத்தில் வாய்திறமையைக் காட்டுவர். முடிந்தவரை பொது தேர்தலுக்காக காத்திருப்பர். எவர் தகுதியும் கேட்டு ஆய்வு செய்யா இனம். தமிழ்ப்பத்திரிக்கையில் அவர்கள் பத்தினிதனம் காட்ட மலிவு விலையில் மனச்சாட்சியை விற்கமாட்டார்கள். சொந்த சாதியை காப்பதில் கைதேர்ந்த இனம் செம்மையான சீனர் இனம். ஆனால், இந்தி நாம் அம்படியா நெற்றிக்கண்ணுடன் பிறந்த இனம். நம் சாதியில் பிறந்த வேதமூர்த்தித் அப்படியா? நீதி நேர்மையின் அடையாளச்சின்னமே நாம் தானே. உலக மூத்தக் குடியில் பிறந்தவர்கள். அதனால்தானே நாம் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவூட்டுகின்றோம். மறந்தா போவோம். உலகில் 15 கோடிக்கு மேற்பட்ட தமிழினத்திற்கு நாடில்லையே ஏன் தெரியுமா? தெரிந்தவர்கள் தயவு செய்து என் புத்தி தெளியும்படி எழுதுங்கள். நன்றியுள்ளவனாக இருப்பேன். இல்லையென்றால் கொஞ்சம் படிப்போம்; கொஞ்சம் கிண்டலடிப்போம்; இல்லையென்றால் சொந்த சமுகத்தையே குத்தி கிழிப்போம். இல்லையென்றால், அடுத்து ரஜினிகாந்தின் அடுத்தப்படத்திற்கு கதாநாயகி யார் ரென்று ஞாயிறு நாளிதழ்களுக்கு ஆய்வு கட்டுரைகள் எழுதி பெயர் போடுவோம். அதுதானே இன்றைய சிலரின் ஊடகப்பொழுது போக்காக இருக்கின்றது. செம்பருத்தி இதழில்தானே வாசகர் சிலர் மாற்றத்துடன் எழுதிவருகின்றார்கள் என்பதனையும் நான் அறிவேன். இருந்தாலும் இப்பகுதியிலும், சில கில்லாடிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனக்கு வம்பு கடிதங்கள் வேண்டா. முடிந்தால் குறை கண்டால் திட்டுங்கள் நல்ல தமிழில் நடையில். என்றும் நன்றியுள்ள அண்ணாமலைஎல்லப்பன்.
எலும்பு துண்டுக்கு அலையும் கிழட்டு நாய் !
வேதமூர்த்தி தன்மானம் உள்ளவர். மற்றவர்களிடம் குறிப்பாக அரசியல்வாதிகளிடம் அதை எதிர்பார்கலாமா?
வேதமூர்த்தி அவசரப்பட்டுவிட்டார் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. அவர் பதவி விலகியதால் யாருக்கும் லாபமில்லை/நட்டமுமில்லை.. இன்னும் சிறிது காலம் பொருத்திருந்தால் நன்மை கிட்டியிருகலாம்.
அண்ணாமலை வுங்கள் எழுத்தில் நிறைய எதிர்பார்ப்பு தெரிகிறது.அசம்மூட்டி எச்சரிக்கை செய்தால் ஒழிய இந்த சமுகத்தை வழி நடத்த முடியாது.அதனால் தான் ச.சாமிவேலு நிறைய கல்லூரிகல் எழுப்பினார் போல் இல்லையேல் அரசாங்க மான்யம் சற்றெ அழிந்திருக்கும் அடையாளம் தெரியா மறைந்துயிருக்கும்,அவர் நல்லவரோ கெட்டவரோ கையிக்கு தெரியாது,எல்லாம் நாராயண சமர்ப்பணம்.
வேதா விலகியது நல்லதே, தன்மானம் தமிழன் தன்மை. !
mIC காரன் விதி விலக்கு, bN கழிவில் காலத்தை கழிக்கிறான்.!
யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ நஜிபுக்கு ஆபத்து இருக்கிறது. வேதா அமைதியாக இருக்க மாட்டார் என்பது மட்டும் திண்ணம்.
அப்ப இன்னும் எவ்வளவு காலம் பொறுப்பது?
ஒரு குரிப்பிட்ட காலம் கனக்கிட்டு தவனை முரையில் நகர்ந்தால் உருதியான எதிர்காலத்தை நம் சந்ததிக்கு ஏற்படுத்த முடியும்.ஒற்றுமையாய் இருந்தல்,விட்டுகுடுக்காமை,சிரிய சுமயாயினும் ஒன்றுப்பட்டு சுமப்பது போன்ற சுப குணங்கள் இல்லாவிடினும் கற்றுக்கொல்வோம்,நாம்,நமக்கு,நமது.தூரநோக்கு சிந்தனை.நாராயண சமர்பணம்.
பால் லவ் நிலை வேறு. பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற ஒரு சமுதாயத்தைப் பிரதிநிதிக்கிறார். அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் அவர் சமுதாயம் அவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடும்! அந்தப் பயம் அவரிடமுண்டு. நமது நிலை வேறு. நமக்குப் பொருளும் இல்லை. அருளும் இல்லை. பொறுப்புணர்ச்சியும் இல்லை. பொறுக்கித்தனத்திற்கு பேர் போன ஒரு சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ‘ஆட்டம்’ காட்டலாம்!