மசீச தனக்குத் தானே குழி தோண்டிக்கொண்டது

mcaமுன்னாள்  கல்வியாளர்  ஒருவர்,  மசீச-வின்  வீழ்ச்சிக்கு  மசீச-வே காரணம்  என்றார்.  1962-இலும்  1973-இலும்  அரசமைப்புத்  திருத்தங்களுக்கு  அது  உடன்பட்டது  அதன்  வலிமை  குறையவும்  புறநகர்  வாக்காளர்  வலிமை  மேலோங்கவும்  வழி  வகுத்தது  என  அரசியல்  ஆய்வாளர்  லிம்  ஹொங்  ஹாய்  கூறினார்.

அப்போது  மசீச  தலைவராக  இருந்த  டான்  சியு  சின்,  நாடாளுமன்றத்தில்  அத்திருத்தங்களைத்  தற்காத்துப்  பேசினார்  என்றாரவர்.

“ஒரு  கட்சி  அதன்   அரசியல்  தளம் வலுவிழக்கவும்  மதிப்புக்  குறையவும் ஒப்புக்கொண்டது  கோமாளித்தனத்தின்  உச்சக்  கட்டமாகும். அதை  ஒரு   மடத்தனமான  தவறு  என்றுதான்  சொல்வேன்”,  என்றாரவர்..

அத்திருத்தங்களால்  நகர்ப்புற  சீன  வாக்காளர்களின்  அரசியல்  மதிப்பு  பாதியாகக் குறைந்தது. சீனர்களின்  மக்கள்தொகை  குறைந்தது  நிலைமையை  மேலும்  மோசமாக்கியது.

வாக்காளர் ஆதரவு இல்லாத  நிலையில்,  மசீசவுக்கும்  கெராக்கானுக்கும்  அம்னோவுடன்  பேரம்  பேசும்  பலம்கூட  இல்லாமல்  போய்விட்டது  என  லிம்  கூறினார்.