உங்கள் கருத்து: வேதாவின் விலகலுக்கு பிரதமர் வருந்துகிறாராம்
டபுல்யுடிஏ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பி.வேதமூர்த்தியை கெட்டவராக சித்திரித்துக்காட்ட முனைகிறாரே தவிர அவரது பதவி விலகலுக்குப் பொறுப்பேற்க தயாராக இல்லை.
மலேசிய இந்தியர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். பிஎன் அரசின் இனிப்பான வாக்குறுதிகளில் மீண்டும் ஏமாந்து விடக்கூடாது.
அபாசிர்: நஜிப், நீங்கள்தான் வேதாவை உங்கள் அணியில் சேரத் தூண்டினீர்கள். அவர் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டீர்கள். அப்படி இருக்க அவரின் திட்டங்கள் வெற்றிபெற வழிவகை செய்வது உங்கள் பொறுப்பல்லவா?
நீங்கள் என்ன செய்தீர்கள். அவரைப் புறக்கணித்து, கொடுத்த வாக்குறுதியையும் காற்றில் பறக்க விட்டீர்கள். இப்போது அவரது செயலைக் கண்டு ஏமாற்றம் அடைவதாகக் கூறுவது நயவஞ்சகத்தின் உச்சம்.
அர்மான்: 1999-இல் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஏமாற்றியதால் சீனர்கள் எதிரணி ஆதரவாளர்களாக மாறினார்கள். இப்போது என்ன ஆகுது பார்ப்போம்.
அபா நாமா: நஜிப், என்ன நாடகம் இது? கடந்த ஏழு மாதங்களில் வேதா பதவி விலகல் குறித்து எவ்வித அறிகுறியும் காட்டவில்லையா?
அவர் உங்கள் துறையில்தானே இருந்தார். அங்கு என்ன நடந்தது என்பதே உங்களுக்குத் தெரியாதா?
விழிப்பானவன்: நஜிப், புரிந்துணவு ஒப்பந்தத்தில்(எம்ஓயு) கையொப்பம் இட்ட நீங்கள் அதைச் செயல்படுத்தும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்பதை ஏன் எண்ணிப்பார்க்கவில்லை? எம்ஓயு-வில் ஒப்புக்கொண்டதைச் செயல்படுத்த தேவையான பணத்தையும் அதிகாரத்தையும் வேதாவுக்குக் கொடுத்தீர்களா?
பார்வையாளன்: வேதா, தம்மை வந்து பார்த்திருந்தால் எம்ஓயு-வைச் செயல்படுத்தி இந்திய சமூகத்துக்கு உதவி இருக்க முடியும் என்பதுபோல் நஜிப் பேசியுள்ளார்.
வேதா, இப்போது தம் பதவி விலகலுக்குக் காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், நஜிப் சொல்வதுதான் உண்மை என்றாகிவிடும்.
சமுராய்: சிறையில் உள்ள சகோதரருக்கே உதவ முடியவில்லை; இவரா இந்திய சமூகத்துக்கு உதவப் போகிறார்?
தலைவெட்டி: வேதா பதவி விலகிய முறை ஏமாற்றமளிக்கிறது. விலகுவதற்குமுன் இந்தியர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று சொல்லிச் சொல்லி நஜிப்புக்கு தொல்லை தந்திருக்க வேண்டாமா.
அப்படிச் செய்திருந்தால் சமூகத்தின் மரியாதையாவது கிடைத்திருக்கும். இப்படிக் கோழைபோல் நடந்திருக்கக் கூடாது.
எதன் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டதோ அதற்குத் தேவையான நிதியினை வேதாவுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். ஒன்றுமே செய்யாமல் வேதாவை செயல் பட முடியாமல் செய்துவிட்டு நஜிப் வருத்தப்படுவது நல்ல நாடகம்!
நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன்—அவன் (நாஜிப்) வேதமூர்த்திக்கு வெறுமனே தான் ஒப்பந்தம் செய்தான்— அவனுக்கு தெரியும் தேசிய முன்னணி தேர்தலில் தோற்றுவிடும் என்று- அதன் காரணமாக எல்லாவற்றிடமும் அள்ளி அள்ளி வாக்குறிதியை கொடுத்துக்கொண்டிருந்தான்
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை
வேதமூர்த்திக்கு நாஜிபின் திருட்டுத்தனம் தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியம் தான். எத்தனை மில்லியன் கொடுத்தானோ.
வேதா சென்றார் திருபினார் ஆனால் இப்போது சிலாங்கூர் இந்திய பள்ளி,மயானம் போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளது ஏன்,அடிலான் தானே அட்சி செய்கிறான் ஏன் மீண்டும் கண்ணீர்.அடிலானில் நம்மவர் இப்போ நம்மவரையே அடகு வைத்துவிட்டனர் போல்.சார் பாஸ்க்கும் டி.எ.பிக்கும் கொள்கை அளவில் என்றுமே ஒத்துபோகாது,முன்பு மூவறும் கூட்டு சேர்ந்ததால் டி.ஏ.பி வைப்பு தொகையையே இழந்தது இப்போ மட்டும் ஏன்.அடிலான் ஆட்சிக்கு வரனும் நமக்கு என்ன செய்றான் பார்போம்.முன்பு கலப்படம் நிகழ்ச்சி நடைப்பெறும்,ஒரு நாடகம்,ரோட்டில் ஒரு விபத்து இரு கார்கள் மோதிக்கொண்டது ஒருவர் ஜப்பான் காரன் இன்னொறுவர் இன்டோனேசியர் இருவருக்கும் ஆங்கிளம் தெரியாது,இவர் ஜப்பானில் திட்டுகிறார் அவர் இன்டோனிசியா மொழியில் திட்டுவதுபோல் கைதை.காமடுயோ காமடி, நாராயண நாராயண.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ,எது நடந்து கொண்டிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது …எது நடக்க விருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்….