முன்னாள் பத்திரிகையாளரும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் நெருங்கிய நண்பருமான ஏ. காடிர் ஜாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “சந்தா குலோஸ்போல் நடிப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தம் வலைப்பதிவில் இவ்வாறு கோரிக்கை விடுத்த காடிர், நஜிப் நாட்டையும் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.
அதைச் செய்யத் தவறினால் நஜிப் “பதவி இறக்கப்படலாம்” என்றவர் எச்சரித்தார்.
“கொஞ்சநஞ்சமுள்ள அரசுப் பணத்தை ரொக்க அன்பளிப்பு, சம்பள உயர்வு என்ற பெயரில் வீணடிக்கக்கூடாது. அப்படிச் செய்வது ஆக்கத்துக்கு உதவாது.
“அவர் ‘ரொக்கம்தான் ராஜா’ என்பதெல்லாம் எடுபடாது. அதனால் கூடுதல் வாக்குகளைக்கூட அவரால் பெற முடியவில்லை. ஏழைகளுக்கு உதவ மேலும் ஆக்கப்பூர்வமான, நிலையான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். சரியான ஆலோசனைகளைச் சொல்லத் தெரியாத அரைவேக்காட்டு ஆலோசகர்களை உதறித்தள்ளிவிட்டு அரசாங்க இயந்திரத்தையும் அரசு அதிகாரிகளையும் நம்ப வேண்டும்”, என ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸின் முன்னாள் தலைமை ஆசிரியருமான காடிர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக காடிர், நஜிப்பின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருவது கண்கூடு. இதை வைத்து நஜிப்பைப் பதவி இறக்க முன்னாள் பிரதமர் மகாதிரும் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடினும் மேற்கொண்டுள்ள ஒரு இயக்கத்தில் காடிரும் சேர்ந்துகொண்டிருக்கிறார் என்று அரசல்புரசலாக பேசப்படுகிறது. ஆனால், காடிர் அதை மறுக்கிறார்.
பூமிபுத்ராக்களை அரை வேக்காட்டு ஆலோசர்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை நீங்கள் பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்களோ! உங்கள் எழுத்தில் உண்மை எப்போதும் இருந்ததில்லையே!
அவரினத்திற்கு ஏதோ பற்றாகுரை அதணால் தான் இந்த புலம்பல்,வெறுப்பு,காரணமில்லாமல் காரியமில்லை.