வேதமூர்த்தி: மன்னிக்க வேண்டுகிறேன்

1 vedaபிரதமர்துறை  துணை  அமைச்சர்  பதவியிலிருந்த  விலகிய  பி.வேதமூர்த்தி,  “இந்திய  ஏழைமக்களிடம்”  அவர்களுக்கு  வாக்குறுதி  அளித்த  சமூக-பொருளாதாரத்  திட்டங்களை  நிறைவேற்ற  முடியாமல்  போனதற்கு  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்.

தம்  வாக்குறுதியை  நம்பி  இந்தியர்கள்  பிஎன்னுக்கு  வாக்களித்தனர்.  அது,  13வது  பொதுத்  தேர்தலில்  பிஎன்  வெற்றி  பெற- அது  குறுகிய  வெற்றிதான்  என்ற  போதிலும்-  உதவியது  என  வேதமூர்த்தி  கூறினார்.

“பிரதமருடன்  ஒத்துழைத்து   ஒப்பந்தத்தில்  ஒப்புக்கொள்ளப்பட்ட  திட்டங்களை  நிறைவேற்றலாம்  எனக்  கடந்த  எட்டு  மாதங்களாக  பொறுமையாகக்  காத்திருந்தேன்.  ஆனால், ஒன்றைக்கூட  நகர்த்த  முடியவில்லை.

“தோல்விகளுக்கு  எந்தச்  சாக்குப்போக்கும்  சொல்ல  விரும்பவில்லை.  தோல்விக்கும்  அதன்  விளைவுகளுக்கும்   முழுப்  பொறுப்பையும்  நானே  ஏற்கிறேன்”.  செனட்டர்  பதவியையும்  துணை  அமைச்சர்  பதவியையும்  துறந்து  இதுவரை  மவுனமாக  இருந்த  வேதமூர்த்தி  மவுனம்  களைந்து  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கூறினார்.

இந்திய  ஏழைகளுக்கு  “நியாயமும்,  சமத்துவமும்,  நீதியும், சுய மரியாதையும்” கிடைப்பதற்காக  இண்ட்ராப்  தொடர்ந்து  பாடுபடும்  எனவும்  அவர்  சொன்னார்.

வேதமூர்த்தி  முன்னறிவிப்பு  ஏதுமின்றி  பிப்ரவரி  10-இல்  பதவி விலகினார்.