ஒரு வாரத்துக்குமுன் செனட்டர், துணை அமைச்சர் பதவிகளைத் துறந்த பின்னர் இன்று முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பொய்யர் என்றும் இந்தியர்களுக்கு இரண்டகம் செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.
அதற்காக, நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
இந்தியர்களை நஜிப் வஞ்சித்து விட்டார் என்றும் அந்தத் துரோகச் செயலை பல தலைமுறைக் காலத்துக்கும் இந்தியர்கள் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.
பிரிக்பீல்ட்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் 20 நிமிடம் மட்டுமே கலந்துகொண்ட வேதமூர்த்தி அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து அவசரமவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
குட்ட கொழப்பி
தமிழனுக்கு ஆயிரம் கட்சி …ஆயிரம் தலைவன் …என்றானபின் எவன்
பேச்சு சபை ஏறும் ?
தமிழன் பேரைச் சொல்லி அங்கங்கே எவன் எவனோ யாசகம் வாங்கி பொழைப்பு நடத்தும் காலம் இது …,
தீர்க்கமான முடிவெடுக்க இயலாத உங்களைப் போன்ற தலைமைகளால் …சமுதாயம் ஏமாறுவதில் இருந்து விழித்துக் கொள்ளும் காலம் வெடித்து …பிளந்து புதிதாக வந்தால் தான் என்
இனம் நலம் பெறும்.
ஒரு குடும்பமே ஒன்று படாத நிலையில், நீங்களா இந்த சிதறிய
சமுதாயத்தை முன்னேற்றப்பாதைக்கு வழி நடத்தப் போகிறீர்கள் ???
முதலில் உங்கள் அண்ணனை எப்படி வெளியே கொண்டு வருவது …
என முயற்சி பண்ணுங்கள் …வேறு அறிக்கைகள் பயன் படா !
போங்க வேதா சார், நீ எப்பொழுதுமே தாமதமாதான் தெரிஞ்சிகீரிங்க…
இதுக்கு நாங்களே தேவலாம் போல,….உங்க கதை அரசனை நம்பி புருஷன கைவிட்ட கதை தான். என்ன எழவோ….
ஐயா… நீங்கள் எல்லாம் ஒரு ஆளு …. நீங்க பிரதமரை பதவி வெலக சொல்லறிங்க …. நீங்க என்ன பெரிய போராட்டவதிய….இல்ல மக்களுக்காக எதாவது செய்திர்களா ? பிரச்சனை வரும்போது வெளிநாட்டுல ஒழிந்டுதுக்கொண்டு மக்களை ஏமாற்றி விட்டு இபோது பெரிய தலவருபோல் அறிக்கை விடுறது …
வேத மூர்த்தியே! தமிழ்ப்படிப்பறிவில்லா அரசியல் தலைவனே!உன்னை சுற்றி இருந்தவர்கள், பலரும் உன் அரசியல் கொள்கை பொய்மை நிறைந்தது; அதிகம் சுயநலத்தைக் கொண்டுள்ளதென்று பலரும் திட்டி எழுதிய போதும்; பேசி சிரித்த போதும் நான் அதிகம் கோபம் கொண்டவானாக இருந்தேன் ஏந்தெரியுமா? அன்றைய 2007/2008 ஆம் காலக் கட்டத்தில் உமது வழக்கறிஞர் நண்பர்களுடன் இந்திய சமுகத்திற்கு உரிமை கேட்டு உங்கள் குழுவினர் நடத்தியப் போராட்டங்கள் எவரும் மறந்திட வில்லை. அன்றையத் தமிழ் தினசரி நாளிதழிகள் பக்கம்பக்கமாக உங்களின் விழிப்புணர்வு வசனங்களைப் படித்து மகிழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களில், நானும் ஒருவன். அப்போதும் நீ லண்டனில் ஒளிந்து கொண்ட போது உனது கபட நாடகத்தைப் பலரும் என்னிடத்தில் வெளிப்படுத்தினார்கள். நான் எதையும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. போராட்டம் என்றால் அப்படிதானிருக்கும் என அமைதி கொண்டேன். எது எப்படியோ அச்சமையம் இந்தியர்களில், குறிப்பாக தமிழர்கள் மூன்று மாதம் ஒற்றுமையின் அடையாளமாக வாழ்ந்தார்கள் என்பது சத்தியமான உண்மையாகும். அதன் பிறகு உனக்காக பலவித கதைகள் கூறி பணம் வசூலித்த போது என் எண்ணம் எவ்வளவு பெரிய முட்டாள் தனமானது என்பதையும் உணர்ந்தேன். சரி உன் ஆசைப்படியே பதவி கிடைத்து விட்டது. இனி உன் எண்ணப்படி பிழைத்துக் கொள்வாய் என்றிருந்தேன். குடும்பத்தோடு கூடிய விரைவில் மீண்டும் இங்கிலாந்து தேம்ஸ் நதிகரையில் வீடு வாங்கி கொண்டு குடியமர்ந்துவிடுவாய் என்று உண்மையாக நம்பியவன் நான். ஆனால், அம்னோகாரனிடம் உந்தன் பணம் வசூல் திட்டம் எதுவுமே நிறைவேராததினால், டத்தோஸ்ரீ நஜிப் வஞ்சித்து விட்டாரென்று வாய்கூசாமல், பிரிக்பீல்ட்சி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதை இனியும் உன் பொய்மையை நம்ப இந்திய சமுதாயத்தினர் கேனையர்கள் அல்ல. படித்த தலைமுறையினர் பலர் இன்று அரசியல் வீதியிலே உலாவர புறப்பட்டு விட்டார்கள். உனக்கு நேர்ந்த கதி இனியும் இந்தியர்களைக் காப்பாற்றுகின்றேன் என கூறி அரசாங்கத்திடமிருத்து பணம் பரிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். இனிமேல் இந்தியச் சமுகத்திடம் பராசக்தி வசனம் பேசி ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பரித்த கயவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தொழிந்து விட்டார்கள். இத்தகைய அரசியல் அலையில் நீயும் காணாமல் போவது திண்ணம்.
இம் இந்த தமிழன் எப்போ தான் ஒற்றுமையாய் , குறை கூறுவதை குறைத்து வாழப் போறானோ? கடவுளே என் இனத்தை காப்பாற்று பா! இப்படி ஒற்றுமை இல்லாததால் தான் “நாம் எடுப்பார் கை பிள்ளையாக, சமுதாய கிள்ளு கீரையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இன்னுமா விளங்கவில்லை?
எதோ அந்த மனுஷன் தனக்கு தெரிந்த முறையில் ட்ரை பண்ணினார்! அது தப்பாகி விட்டது. இப்போ நாம் செய்ய வேண்டியது என்ன? அவரை தனிப்பட்ட முறையிலே அவர் தம் குறை சுட்டிக்காட்டி, பொதுவில் நமது ஒற்றுமையை அல்லவே ஊருக்கு பிரசித்திக்க வேண்டும்? அது தானே புத்திசாலி தனம். அதை விடுத்தது, அவரை (எப்படி இருபினும்…அது நம் இரத்தம்) வாய்க்கு வந்தபடி பகிரங்கமாக திட்டு தீர்த்து, நம் ஒற்றுமை இல்லா தன்மையை வெலிபடுதிகொல்வதனால், நம் மூஞ்சிலே நாம் காரி துப்பி கொள்வதற்கு சமம் இல்லையா? பின் எப்படி நம் ஒற்றுமையை காட்டுவது? முன்னேறுவது இந்த பல்லின மக்கள் கொண்ட நாட்டிலே?
செவி வழி வந்து சேருகிற சிதைந்த செய்திகளை, மாத்திரமே சேகரித்து வைத்துக்கொண்டு வேதமூர்த்தியைப் பற்றி நான் எழுதவில்லை. அவருக்கு எவ்வளவு பெரிய உன்னதனப் பதவி அரசியலில் கிடைத்தது. அதை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாமல், ஏனோதானோ என்று இருந்து விட்டு, அதுவும் வழக்கறிஞர் தொழிலுக்கு படிந்திருந்த அவர் ஏதேனும் ஒருவழியில் இந்திய மக்களுக்கு அங்குள்ள அரசியல் நிலைமையை விளக்கி கூறிருக்கலாம். நமக்கும் ஒரு விதத்தில் அவர் மீது அனுதாபம் பிறந்திருக்கும். எதுவுமே சொல்லாது திடீரென்று ஒரு நாள் பதவி விலகினால் யாருக்குதான் சந்தேகம் வராது. பூனையின் மயிரைப் பிடிங்கி எவனும் புகழ் பெறுவதில்லை என்பதையும் நானும் உங்களைப்போலவே அறிவேம். நீங்கள் எழுதிய வரியை மீண்டும் எழுதுகின்றேன் சரிதான பாருங்கள். “இந்த தமிழன் எப்போது தான் ஒற்றுமையாய்;குறைக்கூறுவதை குறைத்து வாழ போகின்றானோ என வேதனையை வெளிச்சமிட்டுக் காட்டிருந்தீர்கள். இந்தியன் என்று எழுத்தை நகர்த்திருந்தால்; எழுதிருந்தால், நானும் இதைப்பற்றி எழுதிருக்க மாட்டேன். பொதுவில் நிறைகுறையை எழுதுகின்றீர்கள் என நானும் மௌனம் காத்திருப்பேன். அது எப்படி தமிழ் எழுத்தாளர்கள் திட்டும் போது தமிழன் என்றும்; பாராட்டும் போது இந்தியன் என்றும் எழுதுகின்றார்கள். உங்களுக்காக எனது சப்தமில்லாத இரவுகள் சஞ்சலப்படுகின்றன. என் எழுத்தின் அருகில் இருட்டு இல்லை.
வேதமூர்த்தியின் வேதம் இனியும் எடுபடாது. எல்லோரும் தலைவராகிவிட முடியாது. கொள்கை வேண்டும்; வெறும் விளம்பரத்தால் சேவை செய்திட முடியாது.
திருமிகு எ.அண்ணாமலை அருமை;அருமை.1.சப்தமில்லாத இர வுகள் 2. இருட்டு இல்லை. ஒரு கவிக் குயிலின் கண்டனக் குரல்.