இன்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், உயர் நிதிமன்றத்துக்கு வெளியில் குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் சந்திக்க நீதிபதி அஸ்மான் உசேனிடம் அனுமதி பெற்றிருந்தும்கூட அவர்களை சந்திக்க முடியவில்லை.
30-மாத சிறைத்தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் அரை மணி நேரம் சந்தித்து அவர்களுடன் பகலுணவு அருந்த அனுமதி கேட்டார் உதயகுமார்..
உதயகுமார், அவரின் மனைவி எஸ்.இந்திரா தேவி(வலம்)யைச் சந்திக்க நீதிபதி அஸ்மான் அனுமதி அளித்தார். இந்திராவும் லாக்-அப் அருகில் 30 நிமிடம் காத்திருந்தார் ஆனால், உதயா வரவில்லை.
“பிறகுதான் காஜாங் சிறை அதிகாரிகள் அவரைச் சிறைக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்பது தெரிய வந்தது. நீதிமன்ற அனுமதி இருந்தும் இப்படி நடந்துள்ளது”, என்று இந்திரா தெரிவித்தார்.
அது பற்றி அவரும் குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.