பக்காத்தான் ரக்யாட் விண்ணப்பத்தை ஏற்று மார்ச் 8-ஆம் நாள் அதன் மாநாடு நடப்பதற்குமுன் அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் சங்கப் பதிவாளரையும் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பக்காத்தான் இதுவரை ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. முன்று தடவை பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளது என்றாரவர்.
“உள்துறை அமைச்சரும் ஆர்ஓஎஸ்-ஸும் முடிந்த விரைவில் பதிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநாட்டுக்கு முன்னர் ஒப்புதல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் மாநாட்டில் அதைத் தொடக்கி வைக்க வசதியாக இருக்கும்”, என லோக், செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அவருடன் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலியும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாகத்தான் பதிவை ஏற்றுக்கொள்வதில் அப்படி என்னதான் பிரச்சனை ஜஹிட் . விளக்க முடியுமா?