உங்கள் தோல்விக்குப் பிரதமர்மீது பழி போடுவதா: வேதாவைச் சாடுகிறார் கைரி

1 khairiமாற்றங்களைக்  கொண்டுவர  முடியாத  முன்னாள்  செனட்டரும்  துணை  அமைச்சருமான  பி.வேதமூர்த்தி  அதற்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கே  காரணம்  என்று  குறை  சொல்வது நியாயமல்ல  என்கிறார்  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின். 

“அவர்  குழுவாக  இணைந்து  செயலாற்ற  முடியாதவர்,  தம்  போராட்டத்தையும்  செவ்வனே  முன்னெடுத்துச்  செல்லும்  வழிவகை  தெரியாதவர்”  என  கைரி  தம்  டிவிட்டர்  பக்கத்தில்  குறிப்பிட்டார்.

தம்  விருப்பப்படியே   இந்திய  சமூகத்துக்கான  ஒதுக்கீடுகள்  செய்யப்பட  வேண்டும்  என்று  வேதமூர்த்தி  கோரியதாக  இளைஞர், விளையாட்டு  அமைச்சருமான  கைரி  கூறினார். 

“அரசாங்கம்  அப்படி  செயல்படுவதில்லை. அமைச்சுகள்.  அரசுதுறைகளைத்  தாண்டி  பணத்தைத்  தம்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  வேதமூர்த்தி  விரும்பினார். 

“அது  நடக்கவில்லை  என்றதும்  விலகி  இப்போது  பிரதமரைக்  குறை  கூறுகிறார்”,  என  கைரி  குறிப்பிட்டார்.