பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் மேலும் இரு சமூக ஆர்வலர்களும் அவர்கள்மீதான அரச நிந்தனை வழக்கை எதிர்த்து செய்துகொண்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
தியான் சுவா, ஹிஷாமுடின் ரயிஸ், ஆதம் அட்லி ஆகியோர் மனுச் செய்துள்ளபடி அவர்கள்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய “தகுந்த காரணமில்லை” என்றும் அதை செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்புவதாகவும் கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் உசேன் தீர்ப்பளித்தார். .
அம்முவரும் கடந்த ஆண்டு மே 13-இல், பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்குப் பின்னர் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அவர்கள் கோலாலும்பூரில் பெரிய அளவில் கண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்களாம்.
அம்மூவரும் வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கூட்டசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள் என அவர்களின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினர்.

























