பேராக் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் அஹமட் ஜாஹிட் ஹமிடி வென்றதை எதிர்த்து செய்யப்பட்ட இரண்டு மனுக்களை கோலாலும்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பிகேஆர் வேட்பாளர் மதி ஹசனும் ஒரு வாக்காளரும் தாக்கல் செய்த அம்மனுக்கள் குறைபாடுடையவை என்றும் செல்லத்தக்கன அல்ல என்றும் நீதிபதி ஹஸ்னா முகம்மட் ஹஷிம் தீர்ப்பளித்தார்.
செலவுத்தொகையாக மதி ரிம25,000 கொடுக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.