பெர்காசா பினாங்கு அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது

1 penangவியப்பளிக்கும்  ஒரு  செய்தி.  மலாய்க்காரர்  மற்றும்  இஸ்லாம்  தொடர்பான  விவகாரங்களில்  பினாங்கு  அரசுடன்  சேர்ந்து  பணியாற்றத்  தயார்  என  பெர்காசா  அறிவித்துள்ளது.

இன்று,  பெர்காசா உறுப்பினர்கள்  அறுவர்,  மாநிலத்  தலைவர்  முகம்மட்  ரிட்சுவாட்  முகம்மட்  அஸுடின்  தலைமையில்  கொம்டார்  சென்று  இஸ்லாமிய  விவகாரங்களுக்கான  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  அப்துல்  மாலிக் காசிமை  10  நிமிடம்  சந்தித்து  உரையாடினர்.

பின்னர்  செய்தியாளர்களைச்  சந்தித்த  முகம்மட்  ரிட்சுவாட்(படத்தில்  வலம்  இருப்பவர்),  இருதரப்பும்  ஒப்புக்கொண்டால்  ஒத்துழைப்பு  சாத்தியமே  என்றார்.

அந்நிலவரத்தை ஓர் “உருமாற்றம்”  என்று  வருணித்த  அவர்,  மாநில  அரசு  ஒரு  என்ஜிஓ-வுடன்  ஒத்துழைக்க  ஒப்புக்கொள்ளும்  என்று  எதிர்பார்ப்பதாகக்  கூறினார்.