அமைச்சர்: டிங்கி நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பீர்

1 dr subraடிங்கி  நோயைக்  கண்டுபிடிக்கும்  வசதிகளைப்  பெற்றிராத  தனியார்  மருத்துவ  நிலையங்கள்  நோயாளிகளை  அருகில்  உள்ள  அரசு  மருத்துவ  மனைகளுக்கு  அனுப்பி   வைக்க  வேண்டும்  எனச்  சுகாதார  அமைச்சர்  டாக்டர் எஸ்.சுப்ரமணியம்  கூறினார்.

டிங்கி  நோயால்  பாதிக்கப்பட்டவர்களில்  50  விழுக்காட்டினரை  நோய்  தொடக்கக் கட்டத்தில்  இருக்கும்போதே  அடையாளம்  கண்டுபிடிக்க  முடியாமல்  போகிறது. காய்ச்சல்  கண்டவர்கள்  குறைவான  வசதிகளைக்  கொண்ட  மருத்துவ  நிலையங்களை  நாடிச்செல்வதுதான்  இதற்குக்  காரணமாகும்  என்றாரவர்.

“தனியார்  மருத்துவ  நிலையங்களுக்குச்  செல்வதை  நாங்கள்  தடுக்கவில்லை. தனியார்  மருத்துவர்கள்  தேவையான  சோதனைகளை  எல்லாம்  செய்ய  வேண்டும்.  டிங்கி  நோய்  இருந்தால்  அதைக்  கண்டுபிடிக்காமல்  விட்டுவிடக்  கூடாது”,  என  டாக்டர்  சுப்ரமணியம்  கேட்டுக்கொண்டார்.

தொடக்கக்  கட்டத்திலேயே  கண்டுபிடிக்கப்பட்டால்  அந்த  நோயின்  பாதிப்பைக்  குறைக்க  முடியும்  என  சுப்ரமணியம்  குறிப்பிட்டார்.