அன்வார் இப்ராகிம் போன்ற “மாபெரும் தலைவர்” காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை காஜாங் வாக்காளர்கள் “நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்”.
முதலில் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இதைச் சொன்னார். இப்போது ஹுலு லங்காட் எம்பி அப்துல்லா சானியும் அதை அப்படியே எடுத்துரைத்துள்ளார்.
அன்வாரைப்போல் வேறு எந்த மலேசிய தலைவரும் சாதித்ததில்லை என்றவர் புகழாரம் சூட்டினார்.
“உலகம் மதிக்கும் ஒரு மகத்தான தலைவரைப் பெற்றிருப்பதற்காக காஜாங் மக்கள் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்.
“அன்வார், உலகப் பொருளக விருது பெற்றவர் என்பதை மறந்து விடுகிறோம்.
“அதை மகாதிர் பெற்றாரா? டயிம்(முன்னாள் நிதி அமைச்சர்) பெற்றாரா? அதைப் பெறும் தகுதி அவர்களுக்கு இல்லை”, என்றாரவர்.
அரசியலில் எதுவும் சாத்தியமே,ஒறுகாள் அன்வரின் போட்டிக்கான வின்னப்பம் கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டால்(நீதிமன்ற வழக்கு நிளுவை).இவன் மாமாக் எதையும் செய்ய துணிவான்,பேராவில் மன்ரதில் போலீஸ் அத்து மீரி நுழைந்து கனேசனை அவமான படுத்தவில்லையா.