கொக்மீதான மிரட்டல்கள் அதிகரிப்பதற்கு ஐஜிபி-தான் காரணம்

1 kokசர்ச்சைக்குரிய  சீனப்  புத்தாண்டு  காணொளி  தொடர்பில்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்-க்கு  எதிராக  மிரட்டல்  விடப்படுவது  நிற்க  வேண்டுமானால் போலீஸ்  படைத்  தலைவர்  நியாயமாக  நடந்துகொள்ளத்  தொடங்க  வேண்டும்  என்கிறார்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட் சியாங்.

கொக்கின்  சீனப்  புத்தாண்டு  2014  காணொளி  தொடர்பில்  விசாரணைகளை  விரைவாக  செய்துமுடித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்,  “கோழிகளைப் பலி  கொடுத்து  கன்னத்தில்  அறைவோருக்குக்   காசு”  என  அறிவித்த  இஸ்லாமிய  என்ஜிஓ-களுக்கு  எதிராக  உடனடி  நடவடிக்கை  எடுக்காததற்தாக  அந்த  டிஏபி  தலைவர்  சாடினார்.  

இன,  சமய  நல்லிணக்கத்தைக்  கெடுக்க  முனைவோருக்கு  எதிராக  போலீஸ்  உடனடி  நடவடிக்கை  எடுக்காமலிருப்பது  அவர்கள்  மேன்மேலும் அப்படிப்பட்ட  செயல்களில்  ஈடுபட  ஊக்கம்  கொடுக்கிறது  என லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.