மசீச-வின் அவசரப் பொதுக்கூட்டம் இன்னும் மூன்று நாள்களில், பிப்ரவரி 23-இல், நடைபெறவுள்ள வேளையில் அக்கட்சி உறுப்பினர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளமர்வுப் போராட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.
‘மசீச அடிநிலை உற்ப்பினர் மனச்சாட்சி நடவடிக்கைக் குழு’ என்று தங்களுக்குப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், இன்று காலை மணி 11-க்கு மசீச தலைமையகத்தில் ஒன்று கூடினர்.
“இரகசிய வாக்கெடுப்புத் தேவை”, “கட்சியின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும்” எனச் சீனமொழியில் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கி இருந்த அவர்கள் அமைச்சர் பதவிகள் ஏற்கும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என்ற தீர்மானத்தை மறு ஆய்வு செய்வதற்காக மசீச அவசரப் பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது.