அரிசி விலையை அப்படியே வைத்திருப்பது சைட் மொக்தாருக்கு மட்டுமே நன்மையாக முடியும்

1 bernasஅரசாங்கம்  உலகச்  சந்தை நிலவரத்தைப்  பின்பற்றி  அரிசி விலையைக்  குறைக்க  வேண்டும். விலையைக்  குறைக்காவிட்டால்  மக்கள்  பாதிக்கப்படுவார்கள்.  தனி  ஒருவர்  மட்டுமே  பயனடைவார். 

இம்மாத  இறுதியில்  தாய்லாந்தில்  அரிசி  உதவித்தொகை  நிறுத்தப்படுவதைத்  தொடர்ந்து சந்தையில்  அரிசி  நிறைய  வந்துசேரும்  என்பதால்  விலையில்  வீழ்ச்சி  ஏற்படும்  என  எதிர்பார்க்கப்படுகிறது  என  அலோர்  ஸ்டார்  எம்பி  கூய்  ஜிசியாவ்  லியோங்  கூறினார். 

1 alor star mp“மலேசியாவில்  அரிசி  விலை  பழைய  விலையிலேயெ  மாறாமல்  இருந்தால்  பாடிபிராஸ்  நேசனல்  பெர்ஹாட் (பெர்னாஸ்)  மட்டுமே  கொள்ளை  இலாபம்  ஈட்டும். மொத்த  ஆதாயத்தையும்  சைட்  மொக்தார் அல்-புஹாரி  மட்டுமே  அனுபவிப்பார்”,  என  கூய்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார். 

உலகச்  சந்தை  நிலவரத்துக்கு  ஏற்ப,  மலேசியாவில்  அரிசியின்  விலை  இப்போதுள்ளதைவிட  குறைவாக  இருக்க  வேண்டும்  என்று  கூறிய  அவர், அரசாங்கம்  மக்களின்  சுமையைக்  குறைக்க  நினைத்தால்  அரிசி  விலையைக்  குறைக்க  வேண்டும்  என்றார்.