பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஒரு சுமையாக விளங்கும் எனப் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி முகம்மட் ஹனட்ஸ்லா. 6 விழுக்காடு என்பது உலகின் மிகக் குறைந்த வரி விகிதங்களில் ஒன்று என்றாரவர்.
ரிம2,000 வருமானம் பெறும் ஒரு பயனீட்டாளர், வரியாக ரிம15.06 தான் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இது அவரது செலவினத்தில் 2.6 விழுக்காடுதான் என்று அஹ்மட் ஹுஸ்னி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி-யால் பொருள் விலைகள் வெகுவாக உயரா என்றும் 1. 8 விழுக்காடு மட்டுமே உயரும் என அரசாங்க ஆய்வுகள் காண்பிப்பதாகவும் அவர் சொன்னார்.
GST உள்ள மற்ற நாடுகளில் எல்லா குழந்தைகளுக்கும் முதலாவது பட்டப் படிப்பு வரை இலவசம். எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவம் இலவசம். எல்லோருக்கும் போதுமான ஓய்வூதியம் நிச்சயம் ஆனால் இங்கு? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான். ஒரு மனிதனுக்கு இவை முன்றும் தானே முக்கிய செலவுகள். இவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் தாரளமாக கி எஸ் டியை கட்டலாம்.