வேதா கூறுவது பொய் என்பதற்கு அமைச்சர் காண்பிக்கும் ‘சான்றாதாரங்கள்’

1 abd rahmanஅரசாங்கம் இந்திய  சமூகத்துக்கு   உதவவில்லை  என்று  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  தப்பும்  தவறுமான  தகவல்களைப்  பரப்பி  வருவதாக  வீடமைப்பு,  உராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  முகநூலில்  குற்றம்  சாட்டியுள்ளார். 

ஒரு  தடவை  வேதமூர்த்தி,  சிலாங்கூர்,  டிங்கில்,  தாமான்  பெர்மாத்தாவில்  இந்தியர்களின்  வீட்டுப்  பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கேட்டுக்கொண்டாராம்.

“பிரதமர்  உடனே,  என்  அமைச்சுக்கு  ரிம35 மில்லியன்  கொடுத்து  பிரச்னையைத்  தீர்க்கச்  சொன்னார்.  எனவே, பிரதமர்  இந்தியர்  பிரச்னைகளைக்  காதுகொடுத்துக்  கேட்பதில்லை  என்று  வேதமூர்த்தி  குற்றம்  சாட்டுவதில்  உண்மையில்லை”, என  அப்துல்  ரஹ்மான்  குறிப்பிட்டார்.

பல்வேறு  அரசுதுறைகளின்வழி  இந்திய  சமூகத்துக்காக  புத்ரா  ஜெயா  மில்லியன்  கணக்கில்  ஒதுக்கீடு  செய்திருப்பதையும்  பிரதமர் வேதமூர்த்திக்குச்  சுட்டிக்காட்டினார்   எனவும்  அவர்  அந்த  முகநூல்  பதிவில்  கூறினார்.

வேதமூர்த்தியால்  அரசாங்கக்  கட்டமைப்புடன்  இணைந்து  செயல்பட  முடியவில்லை.  அதுதான்  அவரிடமுள்ள  குறைபாடு.

“நானும்  அவரைச்  சந்தித்துப்  பேசியதுண்டு. நியாயமானவர்தான்;  நல்ல  நோக்கம்  கொண்டவர்தான். 

“ஆனால், பொறுமை  இல்லாதவர்”,  என்று  அப்துல்  ரஹ்மான்  குறிப்பிட்டார்.