டிஏபி தலைவர் கர்பால் சிங் அரச நிந்தனைக் குற்றம் புரிந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, யதேச்சாதிகாரமும் அரசியல் பழிவாங்கும் போக்கும் மீண்டும் தலைதூக்கி இருப்பதை உறுதிப்படுத்துகிறது என உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) அமைப்பு கூறியுள்ளது.
“எல்எப்எல் கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறது. கர்பாலுக்கு ஐந்தாண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதன் விளைவாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கலாம்.
“அரசியல் ரீதியிலோ விமர்சனமாகவோ கருத்துரைப்பது ஒரு குற்றமல்ல. கர்பாலும் அப்படித்தான். 2008 பேராக் அரசமைப்பு நெருக்கடியின்போது சட்டக் கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதை எந்தச் சூழலிலும் அரச நிந்தனை என்று வருணிப்பது சரியல்ல”, என எல்எப்எல்-இன் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன் ஓர் அறிக்கையில் கூறினார்.
கர்பால் அரசியல் நிந்தனை புரிந்தார் என்ற தீர்ப்பும் அதற்குமுன் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதும் யதேச்சாதிகாரமும் அரசியல் பழிவாங்கும் போக்கும் திரும்பி வந்திருப்பதைத்தான் நிரூபிக்கின்றன என்று எல்எப்எல் கூறியது.
இந்த தீர்ப்பு அம்னோ எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டதே தவிர அரச நிந்தனைக்காக அல்ல என்று எல்லோரும் அறிந்ததே!!!!!
உலகிலேயே அறிவு உள்ளவர்கள் இந்த உம்னோ காரர்கள் மட்டும்தான் என்பதை மீண்டும் நிறுபித்து உள்ளனர் . அரசு தப்பு செய்தால் யாரும் குறை சொல்ல கூடாது . அப்படி செய்தால் தேச நிந்தனை . நல்ல்லா இருக்கு உலகம் . ஒரு தவறு செய்தால் … அதை தெரிந்து செய்தால் …. அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் …. அனால் இந்த உம்னோ மட்டிகளுக்கு இது புரிய மாட்டிங்குது .
இந்த தீர்ப்பால் , யார் விரோதத்தை சம்பாரித்தார்கள் ? அம்னோவா அல்லது சுல்தானா ?
அம்னோவின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. அல்லா நல்லதொரு முடிவு செய்வார்.