பிகேஆர் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி, தம்மீது வழக்குத் தொடுக்க செலவிடும் பணத்தைக் கொண்டு ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் (ஷபாஸ்), நீர்விநியோகத்துக்குத் தடையாக உள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யலாம் என்று கூறியுள்ளார்.
செராஸ் பத்து 11-இலும் புக்கிட் தம்போயிலும் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டதற்கு சுங்கை லங்காட்டில் ஏற்பட்ட அம்மோனியா தூய்மைக்கேடுதான் காரணம் என்று கூறியதற்காக வழக்கு தொடுக்கப்போவதாக ஷபாஸ் அறிக்கை விடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது ரபிஸி இவ்வாறு கூறினார்.
உருட்டல் மிரட்டல்வழி தம்மை அடக்கிவைக்க முடியாது என்று கூறிய ரபிஸி, பொது விவகாரங்களை எடுத்துரைக்க தயங்கப்போவதில்லை என்றும் மக்களின் நலனுக்காக சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க தயார் என்றும் கூறினார்.
நீரில் அம்மோனியா அளவு உயர்ந்திருந்ததுதான் அவ்விரண்டு ஆலைகளும் மூடப்பட காரணம் என்று அடித்துக் கூறுகிறார் அவர். அதை வலியுறுத்தும் நம்பத்தகுந்த தகவல் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீங்கள் அம்மோனியா என்று சொன்னதை அவர்கள் ஏதோ அம்மோய் சோனியா என்று சொன்னதாக நினைத்திருக்கலாம்! எப்படியோ மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!