தேவாலயத்துக்கு அன்வார் ஒரு சகோதரர்; அரசியல்வாதி அல்ல

1 churchசமயங்களுக்கிடையில்  இணக்கநிலைக்கு  உதவும் என்ற நோக்கத்தில்தான்  காஜாங் இடைத்  தேர்தல்  வேட்பாளர்  அன்வார்  இப்ராகிம்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  தேவாலய  நிகழ்வு  ஒன்றுக்கு  அழைக்கப்பட்டிருந்ததாகவும் மற்றபடி  அவருக்கு  வாக்குகள்  தேடிக்கொடுக்கும்  நோக்கம்  இல்லை  என்றும்  காஜாங்  ஹோலி  பேமிலி  தேவாலயம்(எச்எப்சி)  கூறியுள்ளது.  தேவாலயம்  அரசியலில்  மூக்கை  நுழைப்பதாகக்  கூறப்படுவதை  அது  மறுத்தது.  

நாட்டில்  கிறிஸ்துவர்களுக்கும்  முஸ்லிம்களுக்குமிடையில்  உறவுகள்  மேம்பட  வேண்டும்  என்பதில்  தேவாலயம்  நாட்டம்  கொண்டிருப்பதால் அந்நிகழ்வுக்கு  அனுமதி  அளித்ததாக  எச்எப்சி பாதிரியார் ஜார்ஜ்  ஹாரிசன்  கூறினார்.

“எந்த  அரசியல்  கட்சியையும்  ஆதரிப்பது  அதன்  நோக்கமல்ல”.

தேவாலய  உறுப்பினர்  ஒருவரால்  ஏற்பாடு  செய்யப்பட்ட  அந்நிகழ்வு, தேவாலயக்  கட்டிடத்தில்   நடக்கவில்லை  என்றும்  பல்நோக்கு  மண்டபத்தில்தான்  நடந்தது  என்றும்  அவர்  சொன்னார்.

அந்நிகழ்வில்  பேசிய  அன்வார்,  பல்வேறு  இன,  சமயங்களுக்கிடையில்  சகோதரத்துவம்  தேவை  என்பதை  வலியுறுத்தினார்.