வேதா: ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகண்டு விட்டால் போதுமா?

1 hindrafடிங்கில்,  தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி  வீடுகளுக்கு  ரிம35  மில்லியன்  ஒதுக்கப்பட்டது  “புதிய  செய்தி” என்றும்  பிரதமருடன்  பேசியபோது  அது  குறிப்பிடப்படவில்லை  என்றும்  முன்னாள்  துணை  அமைச்சர்  பி.வேதமூர்த்தி  கூறினார்.

என்றாலும்  அதை  அவர் வரவேற்றார்.  ஆனால்,  இண்ட்ராப்  முன்வைத்த  பல  விவகாரங்களில்  ஒன்றுதான் அது.

“டிங்கில்  மட்டும்தான் நம்முடைய  பிரச்னை  என்பதல்ல. புக்கிட்  ஜலில்  இருக்கிறது.  இன்னும்  பல  தோட்டங்கள்  இருக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு  முறையான  வீடுகள்  கட்டித்தரப்பட  வேண்டும்:  அவர்களை  மறுகுடியேற்றம்  செய்ய  வேண்டி  இருந்தால்  அதையும்  முறையாக  செய்ய  வேண்டும்.

“ஒரு  பிரச்னைக்குத்  தீர்வு  கண்டு  விட்டால்  இந்தியர்களின்  மொத்த  பிரச்னைகளுக்கும்  தீர்வு  கண்டுவிட்டதாக  பொருள்படாது.  ஒரு  நீண்ட  பட்டியலே  இருக்கிறது. காரணம், 50 ஆண்டுகளுக்கு  மேலாக  புறக்கணிக்கப்பட்டு  வந்திருக்கிறோம்”,  என்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  வேதமூர்த்தி  கூறினார்.