பாஸ் தலைவர் சரவாக்கில் நுழைய அனுமதி மறுப்பு

1 mazlanபாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  மஸ்லான்  அலிமான், சரவாக்கில் காலடி  எடுத்துவைக்க  அனுமதிக்கப்படவில்லை.

“இன்று  காலை  மணி  11.30க்கு  சிபு  விமான  நிலையத்தில்  குடிநுழைவு  அதிகாரிகள்  என்னைத்  தடுத்து  நிறுத்தினர்.

“முதலமைச்சர்  அலுவலக  உத்தரவு  என்று  விளக்கம்  தரப்பட்டது.

“நான்  அங்கு  செல்வது  சரவாக்  அரசாங்கத்துக்குப்  பிடிக்கவில்லையாம். குடிநுழைவு  அதிகாரி  கூறினார்”, என மஸ்லான்  அவரது  முகநூல்  பக்கத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

சரவாக்,  மஸ்லான்  வருகைக்குத்  தடை  விதிப்பது  இது  இரண்டாவது  முறையாகும்.  2011,  ஜூலை  6-இல்,  அவர்  மீரி  விமான  நிலையத்தில்  தடுக்கப்பட்டுத்  திருப்பி  அனுப்பப்பட்டார். .