அமைச்சர் பதவி ஏற்பதில்லை என்ற மசீச முடிவில் மாற்றம்

1 mcaஅமைச்சர்  பதவி  உள்பட  அரசாங்கப்  பதவிகளை  ஏற்பதில்லை  என்ற  தீர்மானத்தை  மாற்ற  மசீச  முடிவு செய்துள்ளது.

மசீச-வின்  புதிய  தலைவரான  லியோ  தியோங்  லாய்  தலைமையில்  நடைபெற்ற  அவசரப்  பொதுக்கூட்டத்தில்  இம்முடிவெடுக்கப்பட்டது.

13-வது  பொதுத்  தேர்தலில்  கூடுதல்  இடங்களை வெற்றிபெறத்  தவறினால்  அரசாங்கப்  பதவிகளை  ஏற்பதில்லை  என்று  அக்கட்சி அதன்  பொதுக்கூட்டங்களிலும்  அவசரப் பொதுக்கூட்டங்களிலும்  முன்பு  தீர்மானித்திருந்தது.

ஆனால்,  லியோ,  டாக்டர்  சுவா  சொய்  லெக்  தலைவராக  இருந்த  காலத்தில்  செய்யப்பட்ட  அத்தீர்மானத்தை  ஆதரிக்கவில்லை. அதை  அவர்  வெளிப்படையாகவும்  அவர்  தெரிவித்தும்  இருக்கிறார்.