பள்ளிசார்ந்த மதிபீட்டு முறை (எஸ்பிஏ) நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் அதைக் குறைகூறிய பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கல்வி அமைச்சு மீட்டுக்கொள்ள வேண்டும் என டிஏபி கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்பிஏ-யைக் குறைகூறிய முகம்மட் நூர் இஸ்ஸாட் முகம்மட் ஜொஹாரியையும் மற்ற ஆசிரியர்களையும் கல்வி அமைச்சு தண்டிக்க முற்பட்டதை அது கண்டித்தது. அது, கல்விச் சேவைக்கு எதிரான நியாயமான குறைகூறலை அடக்கி ஒடுக்கும் கொடூரமான, கோழைத்தனமான நடவடிக்கையாகும்.
“துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் இதில் நேரடி கவனம் செலுத்தி, நூர் இஸ்ஸாட்மீதும் மற்ற ஆசிரியர்கள்மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மீட்டுக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்”, என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
முகைதீன் வேண்டும்போது காதை செவிடாக்கிக் கொள்ளும் magic கலை நிபுணர்..! அதனால் நீங்கள் கத்துவது அவரது காதில் ஒரு போதும் விழாது. எத்தனையோ முறை பலவற்றைப் பற்றி ஊரே கேட்கும் படி கத்துகிறீர்கள். என்ன பலன்? செவிட்டு பசு வெடிசத்ததைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து புல் மேய்வதைபோல் செயல்படுகிறார்.
மக்களின் நியாயமான குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதுதான் ஆட்சியாளரின் கடமை பொறுப்பும்கூடா.குறை கூறுபவனை தண்டிப்பது மக்களின் கோபத்தை அதிகமாகும் தவிர தேர்வு காண முடியாது.