அன்வார்: அம்னோ இளைஞர் தலைவர்போல் லியோ பேசக்கூடாது

1 anwarமசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்,  “அம்னோ  இளைஞர்  தலைவர்போல்  பேசுவதை”  நிறுத்த  வேண்டும்  என்று பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  வலியுறுத்தினார்.  1987-இல், ஒப்ஸ்  லாலாங்  நடவடிக்கையில் 108  சமூக  ஆர்வலர்களும்  அரசியல்வாதிகளும் கைது  செய்யப்பட்டதற்கு  அன்வார்தான்  காரணம்  என்று  லியோ  சாடியிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.

பிப்ரவரி  14-இல், காஜாங்  வந்த  லியோ அன்வார்தான்  அப்போது  கல்வி  அமைச்சர்  என்பதால், அவர்தான்  அந்நடவடிக்கைக்குக்  காரணம்  என கூறி  இருந்தார்.

“அப்போது  பிரதமராகவும்  உள்துறை  அமைச்சராகவும்  இருந்த டாக்டர்  மகாதிர்மீது  குற்றம்சாட்டும்  துணிச்சல்  அவருக்கு இல்லை. 

“அதனால்  என்னைச்  சாடுகிறார்.”, என  நேற்று  செராசில்  ஒரு  செராமாவில்  அன்வார்  கூறினார்.

“நன்றாக  பரப்புரை  செய்யுங்கள்”,  என்று கூறிய  அன்வார், “  ஆனால்,  அம்னோ  இளைஞர்  தலைவர்போல்  பேசாதீர்கள்”,  என்றார்.