சிலாங்கூரில், நாளை தொடங்கி தண்ணீர் பங்கீட்டு முறை நடைமுறைக்கு வரும் என்றும் “பிரச்னைக்குரிய பகுதிகள்” கவனத்தைப் பெற்றிருக்கும் என்றும் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.
“நாளையிலிருந்து, மாநில அரசு அட்டவணைப்படி நீர் விநியோகம் செய்யும். இதில். நீர் பிரச்னையை எதிர்நோக்கும் பகுதிகளுக்குக் கவனம் செலுத்தப்படும்”, என டிவிட்டரில் காலிட் கூறினார்.
மாநில ஊடகமான சிலாங்கூர்கினியின் செய்தியின்படி, இரண்டு நாள்களுக்கு நீர் பங்கீடு இருக்கும். அடுத்த இரண்டு நாள்களுக்கு அது இருக்காது. சுழற்சி அடிப்படையில் அது செய்யப்படும்.
மார்ச் மாதக் கடைசிவரை நீர்ப்பங்கீடு அமலில் இருக்கும் என காலிட் கூறினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்து அணைக்கட்டுகளில் நீரின் அளவு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அறவே நீர் இல்லாமல் இருப்பதைவிட இது தேவலை”, என்றாரவர்.
நீர்ப் பங்கீடு செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழுப் பட்டியல் இன்று பின்னேரம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இதனை முதலில் புத்ரா ஜெயாவில் செய்ய வேண்டும். கஷ்டங்களை முதலில் மக்கள் தலையில் வைக்கக் கூடாது; தலைவர்கள் தலையில் வைக்க வேண்டும். அதுதான் உண்மையான சனநாயகம். இதை மக்கள் புரிந்து கொண்டால் தலைவர்களின் தலை பாரம் அதிகரிக்கும்; மக்கள் சுமக்கும் சுமை குறையும்.