மலேசியாகினி அலுவலகத்தில் செத்துப்போன வாத்தும் சிவப்பு சாயமும்

 

Mkini-duckகோலாலம்பூர், பங்சார் உத்தாமாவில் அமைந்திருக்கும் மலேசியாகினி இணையதள செய்தி அலுவலகத்திற்கு வெளியில் ஒரு பெட்டியில் செத்துப் போன வாத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்று இன்ரு காலையில் காணப்பட்டது.

சிவப்புச் சாயம் மலேசியாகினியின் நான்கு மாடி கட்டடத்தின் விளம்பரப்பலகையில் தெளிக்கப்பட்டிருந்தது. அச்சாயம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் மீதும் காணப்பட்டது.

அலுவலகத்தின் முன்வாசலில் ஒரு அட்டைப் பெட்டியில் அந்த செத்துப்போன வாத்து வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டியின் மீது செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கொக்கின் படமும் ஒட்டப்பட்டிருந்தது.

காலை மணி 6.15க்கு அலுவலகத்திற்கு வந்த மலேசியாகினியின் கிராபிக் ஆசிரியர் அஸ்லான் ஸாம்ஹாரி அச்சாயம் அப்போது காயாமல் ஈரமாக இருப்பதைக் கண்டார்.

“ஐந்து பிளாஸ்டிக் பைகளில் வைத்து அவை அலுவலகத்தில் வீசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது”, என்றாரவர்.

மலேசியாகினி விரிவாக வெளியிட்ட தெரசா கொவின் சீனப் புத்தாண்டு வீடியோ செய்திக்கும் அவரை அறைபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று கோலாலம்பூரில் பெப்ரவரி 6 இல் ஒரு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்பு நடத்திய ஆர்பாட்டத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.