தாயிப் சகோதரருக்குக் கையூட்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் விசாரிக்க ஜப்பானுக்கு வலியுறுத்தல்

1 ab taibஜப்பானிய  நிறுவனமொன்று  சரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தாயிப்  மஹமுட்  குடும்பத்தாருக்குச்  சொந்தமான  நிறுவனத்துக்குக்  கையூட்டு  கொடுத்ததாகக்  கூறப்படும்  விவகாரத்தை  ஜப்பானிய  அதிகாரிகள்  மீண்டும்  விசாரிக்கத்  தொடங்க  வேண்டும்  என  சரவாக்  ரிப்போர்ட்  வலியுறுத்தியுள்ளது.

2007-இல், ஜப்பானிய  வருமான வரித்துறை  அதிகாரிகள்  மேற்கொண்ட  விசாரணையில் ஜப்பானிய  கப்பல்  நிறுவனம்  தாயிப்பின்  சகோதரருக்குச்  சொந்தமான  ஹாங்காங்கிலிருந்து  செயல்படும்  ரீஜெண்ட்  ஸ்டார்  நிறுவனத்துக்கு  ரிம32 மில்லியன் “கமிஷன்”  வழங்கியிருப்பது  தெரிய  வந்தது.

சரவாக்கிலிருந்து   ஜப்பானுக்கு வெட்டுமரம்  ஏற்றுமதி  செய்வதற்கு  உரிமங்கள்  பெற்றுத்தந்ததற்குக்  கைம்மாறாக  அப்பணம்  கொடுக்கப்பட்டதாக  தெரிகிறது. 

ஆனால்,  கப்பல்  நிறுவனம்  வரி கொடுப்பதைத்  தவிர்க்க  அதைத்  “தரகர்  சேவைக்கான கட்டணம்”  என்று  கூறிக்கொண்டது. ஜப்பானிய  அதிகாரிகளுக்கு  அது  திருப்தி  அளிக்கவில்லை. அவர்கள்  அதைக்  “கையூட்டு”  என்றனர். 

ஆனால்,  அவர்கள்  தொடுத்த  வழக்கை  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது. 

இப்போது  சரவாக்  ரிப்போர்ட்  தன்னிடம்   புதிய  தடயம்  இருப்பதாகக்  கூறுகிறது  அதை  வைத்து ஜப்பான்  போலீசில்  புகார்   செய்யப்போவதாகவும்  அதை  அடிப்படையாக  வைத்து  ஜப்பானிய  அதிகாரிகள்  மேல்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனவும்  கேட்டுக்கொண்டிருக்கிறது.