டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பினாங்கு முதலமைச்சர் ஆனதிலிருந்து அவரின் புகழ் வானளாவ உயர்ந்து கொண்டே போகிறது.
அவர் செல்லுமிடங்களில் எல்லாம் பொதுமக்களும் ஆதரவாளர்களும் அப்படியே அவரை மொய்த்துக்கொள்வார்கள். இதைப் பார்க்கும் அவரின் அரசியல் எதிரிகள், ஆதரவாளர்கள் அவரைத் ;தெய்வமாக’ ஆக்கி விட்டார்கள் எனக் கிண்டல் செய்வதுண்டு.
அது பற்றி அண்மையில் கினிடிவி-இல் கருத்துரைத்த லிம், அரசியல்வாதிகளை அப்படியே அழைப்பது தப்பு என்றார்.
“எந்தவொரு தலைவரும் தெய்வமாக முடியாது. தெய்வங்கள் தவறு செய்யா. ஆனால், நாம் செய்வது உண்டு”, என்றார்.
சரியாக சொன்னார் லிம்,இல்லாவிடில் இவரை தெய்வமாக்கி
நம்மவர்கள் கிடா வெட்ட தொடங்கி விடுவார்கள்.
நல்ல அரசியல் வாதிக்கு நாவடக்கம் முக்கியம் என்று நிருபித்து விட்டார் tq
உனது ……
தொண்டினை ……
இக்குமுகாயம் ……
வாழ்த்தும் …..
ஆகா என்ன அரியாமை,அவன் சூசகமா சொல்றான்,அவனும் சராசாி மனிதன் என்று இங்கே கைதட்டல்,அவனும் சராசரி அரசியல்வாதி நம்பாதே தம்மை.நாராயண நாராயண.
இதையெல்லாம் சீனன் செய்யமாட்டான். எங்கள் தமிழன் செய்வான்! தெய்வம் என்று சொல்லுவதும் அடுத்த நாளே சைத்தான் என்று சொல்லுவதும் எங்களுக்குக் கை வந்த கலை!
நாங்க கோயிலும் கட்டுவும் செருப்பாலும் அடிப்போம்
நாங்க தமிழனடா!
தப்பு வேல்வேல்.. கோயில் கட்டுவோம்.. சரி, செருப்பால் அடிப்போம்.. இல்லை, நம்மைதான் ஆங்காங்கே செருப்பால் அடிக்கின்றார்களே.. நாமும் மன்னித்துவுடுவோம்…
சகோதரர் லிம் ஓர் அரசியல்வாதி….அவரிடம் குறைகள் உள்ளன, ஆயினும் அவை ஒரு மனிதனுக்கு இருக்கின்ற இயல்புகள்தான். ஆனால் அவர் ஒரு சிறந்த முதலமைச்சர். மாநிலத்தை பல சவால்களுக்கிடையே சிறப்பாக வழிநடத்தி வருகின்றார். அவர் மேலும் சிறந்த ஆட்சியை வழங்க அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க எல்லா தெய்வங்களும் அந்த ஆண்டவரும் அருள்பாலிப்பார்களாக!
செருப்படி, குத்து எல்லாம் கிடைத்து விட்டது இன்னும் எத்து
கிடைக்கவில்லை,அதற்குள் உஷாரகிவிடுவோம்.