ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தீவிரவாதிகளின் கருத்துகளுக்கு இடம் அளிக்கக்கூடாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களின் கருத்துகளை எடுத்துரைப்பதாலும் பரப்புவதாலும் தீவிரவாதிகள் “எதற்கு ஏங்குகிறார்களோ அந்த விளம்பரம்” அவர்களுக்குக் கிடைத்துவிடும் என நஜிப் அவரின் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
“அவர்களைக் கண்டிக்க வேண்டியதில்லை. புறக்கணிப்பதே போதும்….”, என்றாரவர்.
“இந்தத் தீவிரவாதிகள் சமூக வலைத்தளங்களில் செய்வதும் சொல்வதும் தப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி இருக்கும்போது இணையத்தில் அவர்களின் கருத்துகளுக்கு நாம் ஏன் இடமளிக்க வேண்டும்?
“நாட்டின் இணக்கநிலையைக் கட்டிக்காக்க நினைத்தால், இந்தத் தூண்டுதல்காரர்களுக்கு இடமளிக்காதீர்கள். அவர்களின் கருத்துகள் அச்சத்தையும் வெறுப்பையும்தான் வளர்க்கும் என்பதால் அவற்றை மற்றவர்களுக்குத் தெரிவிக்காமலிருப்பதே மேல்”, என்றாரவர்.
அதனால் தான் உத்துசானைப் புறக்கணியுங்கள் என்கிறோம். தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டியதே!
Yarupa athu….
இவனெல்லாம் பிரதம மந்திரி –கூறு கெட்ட ஊழல் வாதி. இந்நாடு இவ்வளவு மோச மான நிலைக்கு வரும் என்று நான் என்னவே இல்லை.
அந்த நாளிதழை படிக்காதீர் .வெறும் குப்பை .உண்மை சொல்ல தெரியாது .எல்லாம் இன வெறிதான் .முடிந்தால் ஓசியில் படியுங்கள் காசு கொடுத்து வாங்காதீர் அதுதான் உ பத்திரிகை .
நம் பிரதமர் சொல்லிவிட்டார். உடனே செயல் படுத்துங்கள். பரிசான் நேஷனல் செய்திகளை புறக்கணியுங்கள் அம்னோ செய்திகளை புறக்கணியுங்கள் இறுதியாக நாஜிப் செய்திகளையும் புறக்கணியுங்கள். இவை அனைத்தும் தீவிரவாதம் நிறைந்தவை.
இப்ராஹிம் அலியை விட்டு வைக்கின்றீர்கள், கன்னத்தில் அறைவது குற்றம் இல்லை என்று உள் சிலுவார் அமைச்சர் சொல்லுகிறார், மாட்டுத்தலை, பிட்டம் காட்டுதல் போன்ற செயல்களை ஊக்குவிப்பவர் யார்? உங்கள் அரசாங்கம் தானே நஜீப்..