சிலாங்கூர் அரசு, நான்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சுத்திகரிக்கப்படாத நீர் அளிப்பதை நிறுத்துவதால் மூன்று மில்லியன் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஷபாஸ் எச்சரித்துள்ளது.
“நாள்தோறும் 500 மில்லியன் லிட்டர் நீரைக் குறைக்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தால் 750,000 வீடுகளுக்கு(மூன்று மில்லியன் பயனீட்டாளர்களுக்கு) நீர் விநியோகம் தடைப்படும்…….”என ஷபாஸ் செயல்முறை இயக்குனர்(தொழில்நுட்ப மேம்பாடு) வி.சுப்ரமணியம் கூறினார்.
குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய நடவடிக்கைக்கு அவசரத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க ஷபாஸால் இயலாது என்றாரவர்.
மேலும், மாநில அரசு அறிவித்தபடி இன்று முதல் நீர்ப் பங்கீட்டை அமல்படுத்துவது முடியாத செயல் என்றும் சுப்பிரமணியம் சொன்னார். ஏனென்றால், அத்திட்டத்துக்குத் தேசிய நீர் சேவை ஆணையம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.
ஆனால், அணைக்கட்டுகளில் நீரின் அளவைப் பார்க்கையில் நீர்ப் பங்கீடு தேவைதான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்..