டயிம்: நஜிப் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார்

1 daimபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் இன்னும்  திடமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  நினைக்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின்.

“வலுவான  தலைமைத்துவத்தையே  மக்கள்  விரும்புகிறார்கள்”,  என்று  கினிபிஸ்   நேர்காணலில்  தெரிவித்த  டயிம்,  நஜிப்  திடமாக  நடந்துகொள்வதுமில்லை  சரியாக  முடிவெடுப்பவதும்  இல்லை  என்றார்.

பணவீக்கத்தைச்  சமாளிப்பதிலும்  சமய  விவகாரங்களில்  பதற்றத்தை  உண்டுபண்ணுவோரை  அடக்கிவைப்பதிலும்  அரசாங்கம்  பலவீனமாக  நடந்துகொள்வதாக  அவர்  குறைகூறினார். 

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமையும்  டயிம் சாடினார். அவர்  அரசாங்கத்தில்  இருந்தபோதுகூட  “எந்தப்  பிரச்னைக்கும்   தீர்வுகண்டவர்  அல்லர்”  என்றாரவர்.  அன்வாரும்  ஒரு  பலவீனமான  தலைவரே  என்பது  டயிமின்  கணிப்பு.