பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைக் கண்டு மாற்றரசுக் கட்சிகள் மிரண்டு போயுள்ளன. எனென்றால், உண்மையில் அந்த வரியால் பொருள்களின் விலை குறையும்- ஓராண்டுக்குப் பின்னர் அவ்வாறு நிகழும் என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும்போது 5-10% விற்பனை வரி இரத்தாகும் என்பதால் பொருள் தயாரிப்பின் அடக்கச் செலவு குறையும் என்றவர் கூறுகிறார்.
“(இதனால்) விலைகள் குறையும்……..ஓராண்டுக்குப் பிறகு.
“அப்போது எதிர்ப்புகள் அடங்கும். எல்லாரும் பிஎன்னைப் பாராட்டுவார்கள்”, என்றாரவர்.
இப்போது, பிஎன் அரசை ‘Barang Naik (விலைவாசி உயரும்) அரசு என்று எதிரணியினர் கேலிபேசி வருகிறார்கள். ஜிஎஸ்டி-க்குப் பிறகு அதை ‘Barang Turun(விலைவாசி குறையும்) அரசு என்று அனைவரும் பாராட்டப்போகிறார்கள் என்று அஹ்மட் கோலாலும்பூரில் ஜிஎஸ்டி-ஆதரவு கருத்தரங்கம் ஒன்றில் கூறினார்.
பி ன் இப்போதவது ஒத்துகுதே நாய்க் பராங் கிதஹென்று.
மக்களின் சுமையை குறைத்தாலே பெரும் புண்ணியம்.