வேதா: மஇகாவே அடிமைத்தனத்தை உதறித்தள்ளி ‘துவானை’விட்டு விலகி வா

vedaதுணை  அமைச்சர்  பதவியைத்  துறந்த  பின்னர்,  இந்தியர்களுக்கு  உதவவில்லை  எனப்  பிரதமரைச்  சாடிவரும்  பி.வேதமூர்த்தி,  இப்போது  மஇகா  பிஎன்னைவிட்டு  வெளியேற  வேண்டும்  என்ற  கோரிக்கையை  முன்வைத்துள்ளார்.

மஇகா இந்திய  சமூகத்திடம்  நேர்மையாக  நடந்துகொள்வது  உண்மையாயின்  அதை  நிரூபிக்க  இதைச்  செய்ய  வேண்டும்  என்று  மலேசிய  இண்ட்ராப்  சங்கத்தின்  தலைவரான  வேதமூர்த்தி  கூறினார்.

“இப்போதைய  தலைவர்கள்  இப்படிப்பட்ட  துணிச்சலான செயலை  முன்னெடுப்பார்களானால்  அவர்களை  எண்ணி  மஇகாவை  நிறுவிய தலைவர்கள்  பெருமிதம்  கொள்வர்”, என்றாரவர்.

தமது  பதவி  விலகலை  அடுத்து,  கடந்த  ஐந்தாண்டுகளில் ரிம500  மில்லியன்  இந்தியர்களுக்காக  செலவிடப்பட்டு  வந்திருப்பதாக பிஎன்  “தப்பான  தகவலைப்  பரப்பி”  வருகிறது  என்றும்  வேதமூர்த்தி  கூறினார்.
“அது  உண்மையாயின்  அந்த  ரிம500  மில்லியன்  இந்திய  சமூகத்தைச்  சென்றடையவில்லை”, என்றார். 

அந்த  ரிம500 மில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது  என்பதைக்   காண்பிக்க  முடியுமா  என்றும்  வேதமூர்த்தி  அரசாங்கத்துக்குச்  சவால்  விடுத்தார்.