சிலாங்கூரில் நீர் விநியோகம் மொத்தமும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

waterசிலாங்கூரில்  நீரளிப்புச்  சேவையில்  ஈடுபட்டுள்ள  நான்கு  நிறுவனங்களையும்  மாநில  அரசு  எடுத்துக்கொள்ளும். அந்நிறுவனங்களுக்கு  இழப்பீடாக  ரிம9.64 பில்லியன்  ரிங்கிட்  வழங்கப்படும். இதற்கான  ஒப்பந்தம்  ஒன்றை  சிலாங்கூர்  அரசும்  கூட்டரசு  அரசாங்கமும்  இன்று  செய்துகொண்டன.

சிலாங்கூர்  அரசு  அந்நிறுவனங்களில்  பங்குரிமை  பெறுவதற்கு  புத்ரா ஜெயா  ரிம 2 பில்லியன்  கொடுத்துதவும்.

அதற்குக்  கைம்மாறாக  கூட்டரசு  அரசாங்கம்  லங்காட்  2 நீர்  சுத்திகரிப்பு  ஆலையைக்  கட்டும்  பணியைத்  தொடர்வதற்கு  சிலாங்கூர்  அனுமதிக்கும்.