மலேசியாகினி மீது செய்வினை தாக்குதல்?

mkiniமலேசியாகினி  தொடக்கப்பட்ட  காலத்திலிருந்து  அதற்குத்தான்  எத்தனை  எத்தனை  தடைகள், தடங்கல்கள். கடுமையான    விமர்சனங்கள்,  போலீஸ்  அதிரடிச் சோதனைகள்  வழக்குகள்,  செய்தியாளர்  கூட்டங்களில் கலந்துகொள்ளத்  தடை….இப்படி  பல  எதிர்ப்புகளை  அது  சந்தித்து  வந்துள்ளது.

ஆனால், நேற்று  அதிகாலை  அதன்  அலுவலகத்தில்  நடந்துள்ள  தாக்குதல்  அது  சற்றும்  எதிர்பாராத  ஒன்று.

சிவப்புச்  சாயம்  வீசியடிக்கப்பட்டு  ஒரு  வாத்தும்  விடப்பட்டிருந்தது. அத்துடன் டிஏபி  எம்பி,  தெரேசா  கொக்கின்  மூன்று  நிழற்படங்கள்  தனித்தனி  பிளாஸ்டிக்  உறைகளுக்குள்  வைக்கப்பட்டிருந்தன. அந்த  உறைகள்  ஒவ்வொன்றிலும்  ஒரு  பிடி  அரிசியும்  சிவப்பு  நூல்  கோக்கப்பட்ட  ஊசியும் வைக்கப்பட்டிருந்தன.

போலீசார்  இவற்றை  விசாரணைக்கு  எடுத்துச் சென்றுள்ளனர்.

இதைப்  பற்றி  விசயம்  தெரிந்தவர்களிடம்  கேட்டதற்கு, யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள்  செய்வினைக்குத்தான்  இப்படிப்பட்ட  பொருள்கள்  பயன்படுத்தப்படும்  என்றனர்.

ஊசி ஒரு  கொலைக்கருவி. ஒரு  மனிதரையோ,  நிறுவனத்தையோ  அழிக்கும்  நோக்கத்துடன்  அவ்வாறு  செய்திருக்கிறார்கள்  என்று  ஒருவர் சொன்னார்.